ஈரானில் மரண வேட்டை: சில மணி நேரங்களில் தூக்கு தண்டனை? ட்ரம்ப் எச்சரிக்கையை மீறி ஆவேசமாகச் செயல்படும் அரசு!
ஈரானில் கடந்த 17 நாட்களாக நடைபெற்று வரும் அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கொடூரமான நடவடிக்கைகளில் முதன்மையானவராக 26 வயதான எர்ஃபான் சொல்தானி (Erfan Soltani) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவுகளில், "உதவி வரப்போகிறது" என்று போராட்டக்காரர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால் ஈரான் மீது "மிகக் கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். "ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதும், இப்போது தூக்கிலிடுவதும் உங்களுக்குச் சாதகமாக அமையாது" என ட்ரம்ப் நேரடியாக ஈரானை எச்சரித்த போதிலும், ஈரான் அரசு தனது பிடிவாதத்தைக் தளர்த்திக் கொள்ளவில்லை. இதற்கிடையில், ஈரானின் முன்னாள் இளவரசர் ரெசா பஹ்லவியுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
ஈரானியப் பாதுகாப்புப் படைகளான ஐ.ஆர்.ஜி.சி (IRGC) மற்றும் பாசிஜ் (Basij) அமைப்புகள் போராட்டக்காரர்களைச் சுட்டுத்தள்ள இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

