ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் களமிறங்கியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானியப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, "உதவி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்" என்று டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பதிவிட்டது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தாரில் உள்ள 'அல்-உடைத்' (Al Udeid) விமான தளத்திலிருந்து சில அமெரிக்க முக்குய தளபதிகளை வெளியேறும்படி அமெரிக்க ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு டிரம்ப் விடுத்துள்ள வார்னிங்கில், "போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால், அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்" என்று கூறியுள்ளார். "நாங்கள் லோடட் அண்ட் ரெடி (Locked and Loaded)" என்று டிரம்ப் கூறியிருப்பது, ஈரான் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்களை அமெரிக்கா டார்கெட் செய்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்கிடையில், ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) தங்களது ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
சௌதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகள், தங்களது வான்பரப்பை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று ஒரு பக்கம் முட்டுக்கட்டை போட்டாலும், அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்கள் மூலம் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது. ஈரானில் இணையம் முடக்கப்பட்டு 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள், அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
