கடந்த 2 தினங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து மற்றும் நேட்டோ படைகள் அமெரிக்க படைகளை தவிக்கவிட்டு தப்பியோடியதாக அதிபர் டொனால் ரம் குறிப்பிட்டு இருந்தார். ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்த வேளை அமெரிக்க படைகளே முன்னணியில் நின்றதாகவும். பின்னால் தான் நேட்டோ படைகள் நின்றதாகவும் அவர் குறிப்பிட்டு, ஐரோப்பிய நாட்டு வீரர்களை எல்லாம் இழிவு படுத்தி இருந்தார். ஆனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்களோடு போரிட்டு, முன்னணியில் நின்று இறந்து போன பிரிட்டன் ராணுவ வீரர் ஒருவரின் தாயார் டொனால் ரம் , மண்ணிப்பு கேட்க்க வேண்டும் என்று போர் கொடி தூக்கியுள்ளார். இது உலகளாவிய ரீதியில் பெரும் சர்சையை தோற்றுவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் போரில் ஐரோப்பிய NATO படை வீரர்கள் யாரும் முன் களத்தில் (Front lines) நின்று போராடவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய பேச்சு, இப்போது பிரிட்டனில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள லோரெய்ன் மெக்லூர் (Lorraine McClure) என்ற தாய், டிரம்ப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இவரது மகன் ஆரோன் மெக்லூர், 2007-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானம் தவறுதலாக வீசிய குண்டில் (Friendly fire) தனது 19-வது வயதிலேயே உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மகனைப் போலவே 457 பிரித்தானிய வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் தியாகத்தை டிரம்ப் கொச்சைப்படுத்துவது தமக்கு மிகுந்த வேதனையும் கோபமும் அளிப்பதாக லோரெய்ன் கூறியுள்ளார். "டிரம்ப் தனது தனிப்பட்ட ஈகோவுக்காக (Ego trip) உண்மைகளை மறைக்கிறார்; அவர் ஒவ்வொரு வீரரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்காகத் தங்களது உயிரையே பணயம் வைத்துப் போரிட்ட நட்பு நாட்டு வீரர்களை, "அவர்கள் சும்மா பின்வரிசையில் வேடிக்கை பார்த்தார்கள்" என்று டிரம்ப் கூறியது ஒட்டுமொத்த பிரிட்டன் ராணுவத்தையே அவமதிக்கும் செயல் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சனை இப்போது அரசியல் ரீதியாகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பலரும் டிரம்பின் இந்தக் கருத்துக்குத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
