தமிழ்நாட்டில், "நான்தான் தேசியத் தலைவர் பிரபாகரனைப் பார்த்தேன், அவரோடு நான்தான் அதிக நேரம் பேசினேன்" என்று பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கூறி வருவது வழக்கம். ஒருபுறம் "ஆமைக்கறி உண்டேன்" என்றும், மறுபுறம் "பிரபாகரன் என்னைக்கட்டி அணைத்தார்" என்றும் கூறுவார்கள். ஆனால் இங்கே திருமாவளவன் ஒரு படி மேலே போய், தலைவரின் மனைவி தொடர்பாகவும், "காதலுக்காகத்தான் 14 பேரைச் சுட்டுக்கொன்றேன்" என்று பிரபாகரன் கூறியதாகவும் பேசி வருகிறார்.
தற்போது இவர்களிடம் பேசுவதற்குப் பொருள்கள் இல்லை. எதனைப் பேசுவது? எப்படிப் பரபரப்பான செய்திகளை உருவாக்கி 2026 தேர்தலில் தங்கள் இருப்பைத் தக்கவைப்பது என்பதுதான் இது போன்ற அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம். அதற்காகத் "தலைவர் பிரபாகரன் வேறு சாதி, அவர் மனைவி மதிவதனி வேறு சாதி" என்றெல்லாம் கதை அளந்து வருகிறார் திருமாவளவன்.
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தனது காதலுக்காக 14 பேரைக் கொலை செய்யவில்லை. மாறாக, 14 பேரை அவர் சுட்டுக் கொன்றதாகத் தன்னிடம் சொன்னார் என்பது திருமாவளவனால் சொல்லப்படும் கட்டுக்கதை. அந்தக்காலகட்டத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாக இருந்த மற்றும் காட்டிக்கொடுத்த தமிழர்கள் கொல்லப்பட்டார்களே தவிர, சாதி வெறிக்காக யாரும் கொல்லப்படவே இல்லை.
திருமாவளவனின் இந்தப் பேச்சு, உலகத் தமிழர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழக அரசியலில் உங்கள் இருப்பைத் தக்கவைக்க, ஏன் மேதகு பிரபாகரன் அவர்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கேள்வியாக உள்ளது. (கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது, பாருங்கள்). மேலும், தேசியத் தலைவர் அவர்கள் திருமணம் செய்து கொண்ட வேளையில் அவர் அருகே இருந்த சில போராளிகளை நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
