தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிச்சிருக்கற 'ஜனநாயகன்' படத்துக்கு இப்போ நேரம் சரியில்லை போல! தணிக்கை குழு (Censor Board) இந்தப் படத்துக்குச் சான்றிதழ் கொடுக்க மாட்டோம்னு பிடிவாதம் பிடிச்சு, மேட்டரை மறுஆய்வுக் குழுவுக்குத் தள்ளிவிட்டுட்டாங்க. "என்னப்பா இது அநியாயமா இருக்கு?"ன்னு தயாரிப்பு நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டுக்குப் போக, அங்க நீதிபதி "உடனே சர்டிபிகேட் குடுங்கப்பா"ன்னு ஒரு அதிரடித் தீர்ப்பைச் சொன்னாரு. ஆனா, அந்தத் தீர்ப்பு வந்த அடுத்த அஞ்சாவது நிமிஷமே சென்சார் போர்டு "அலோவ்.. நாங்க மேல்முறையீடு பண்றோம்"னு சொல்லி ஸ்டே (Stay) வாங்கிட்டாங்க. ஒரு படம் ரிலீஸாகுறதுக்குள்ள இத்தனை டிவிஸ்ட்டான்னு ரசிகர்கள் இப்போ தலையில கை வச்சு உட்கார்ந்துருக்காங்க.
ஹைகோர்ட்ல மேட்டர் இப்போதைக்கு 'பெண்டிங்'ல (Pending) இருக்கறதால, தயாரிப்பு நிறுவனம் "நாங்க சுப்ரீம் கோர்ட்டுக்கே போறோம்"னு டெல்லிக்கு பிளைட் ஏறிட்டாங்க. ஆனா அங்கேயும் ஒரு செக்! சென்சார் போர்டு முந்திக்கிட்டு போய் சுப்ரீம் கோர்ட்ல ஒரு 'கேவியட்' (Caveat) மனுவைத் தாக்கல் பண்ணிட்டாங்க. அதாவது, "எங்ககிட்ட கேட்காம விஜய்யோட படத்துக்குச் சாதகமா எந்த உத்தரவும் போட்டுறாதீங்க எஜமான்"னு முன்கூட்டியே ஒரு பிட்டைப் போட்டு வச்சிருக்காங்க. இந்திய சினிமா ஹிஸ்டரிலயே ஒரு படத்துக்கு எதிரா சென்சார் போர்டு இவ்வளவு வேகமா சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனது இதுதான் முதல் முறையாம்.
இதனால ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய படம் இப்போ தேதி குறிப்பிடாம தள்ளிப்போயிருக்கு. பொங்கலுக்கு தளபதி தரிசனம் கிடைக்கும்னு ஆசையா இருந்த ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய 'பல்பு' கொடுத்த மாதிரி ஆகிடுச்சு. ஒரு பக்கம் 'பராசக்தி' தியேட்டர்ல ஈ ஓட்டிக்கிட்டு இருக்கறப்போ, 'ஜனநாயகன்' வந்துருந்தா கல்லா கட்டியிருக்கும்னு தியேட்டர் ஓனர்கள் இப்போ கண்ணீர் வடிக்கிறாங்க. ஆனா இந்த சென்சார் போர்டு பண்ற அலப்பறையைப் பார்த்தா, படத்தை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டாங்க போலத் தெரியுது.
வர்ற 20-ஆம் தேதி ஹைகோர்ட்ல அடுத்த ரவுண்டு விசாரணை இருக்கு. அதுக்குள்ள சுப்ரீம் கோர்ட் ஏதாச்சும் 'மேஜிக்' பண்ணி படத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுக்குமான்னு தான் இப்போ கோலிவுட்டே வெயிட் பண்ணுது. என்னதான் அரசியல் பின்னணி, சென்சார் போர்டு கெடுபிடின்னு சுத்தி சுத்தி அடிச்சாலும், "தளபதி வர்றது லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா வருவாரு"ன்னு விஜய் ஃபேன்ஸ் இப்போ சோஷியல் மீடியால ஹேஷ்டேக் போட்டுத் தள்ளுறாங்க. பாப்போம், இந்த ஜனநாய(கன்) வெல்லுமா இல்ல சென்சார் போர்டு வெல்லுமான்னு!
