டென்மார்க்கோடTOP கமாண்டோக்கள் ரம்பிடம் இருந்து கிரீன்லாந்தை பாதுகாக்க சென்றுள்ளார்கள்


 

ரம் மாமா இப்போ செம 'காண்டு'ல இருக்காரு. "கிரீன்லாந்தை நான் வாங்கியே தீருவேன், அதுவும் நல்ல வழியில முடியலைன்னா, வேற வழியில (Hard Way) எடுப்பேன்"னு ஒரு போடு போட்டுருக்காரு. ஒரு பக்கம், அங்க இருக்குற மக்களுக்கு ஆளுக்கு ஒரு 100,000 டாலர் கொடுத்து கரெக்ட் பண்ணலாம்னு மாமா கணக்கு போட, இன்னொரு பக்கம் டென்மார்க் கவர்ன்மென்ட் "டேய்.. இது எங்க ஊருடா!"ன்னு கொந்தளிச்சு நிக்கிறாங்க. "யாரு வந்தாலும் விடமாட்டோம், முதல்ல சுடுவோம்.. அப்புறமாத்தான் கேள்வி கேட்போம்"னு ஒரு அதிரடி ரூல்ஸையே (Shoot first, ask questions later) டென்மார்க் இப்போ ரிலீஸ் பண்ணிருக்காங்க.

மாமாவோட இந்த மிரட்டலுக்குப் பயப்படாம, டென்மார்க்கோட டாப் கமாண்டோக்களான 'ஜேகர் கார்ப்ஸ்' (Jaeger Corps) மற்றும் 'ஃபிராக்மென்' (Frogmen) இப்போ பனிக்குள்ள இறங்கிப் பயிற்சி எடுத்துட்டு இருக்காங்க. இவங்க சாதாரண ஆளுங்க இல்லைங்க... மைனஸ் டிகிரி குளிருல, கும்மிருட்டுல, சாப்பாடே இல்லாம வாரக்கணக்குல பனிக்குள்ள பதுங்கி இருந்து தாக்குறதுல இவங்க கில்லாடிங்க. பிரிட்டிஷ் SAS ரேஞ்சுக்கு இவங்க ட்ரைனிங் இருக்குமாம். இந்த 'ஐஸ் வாரியர்ஸ்' (Ice Warriors) இப்போ கிரீன்லாந்து எல்லையில துப்பாக்கியோட தவம் இருக்காங்க.

இதுல இன்னும் ஹைலைட் என்னன்னா, 'சிரியஸ் டாக் ஸ்லெட்' (Sirius Dog Sled) அப்படிங்கிற ஒரு ஸ்பெஷல் டீம். இவங்க நாய்கள் இழுக்குற வண்டியில ஏறி பனிப்பாறைகள் மேல 16,000 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் ரோந்து போவாங்க. கிரீன்லாந்துல இருக்குற விலை உயர்ந்த தாதுக்கள் மேல ரம் மாமாவுக்கு ஒரு கண்ணு இருக்குறதால, அந்த ஏரியாவுல எலி கூட நுழையாம இவங்க காவல் காக்குறாங்க. மாமா வர்றதுக்கு முன்னாடி, இவங்க அந்த ஏரியாவையே ஒரு 'மிதக்கும் கோட்டை' மாதிரி மாத்திட்டாங்க.

மொத்தத்துல, கிரீன்லாந்து விவகாரம் இப்போ ஒரு பெரிய 'நேட்டோ' (NATO) பஞ்சாயத்தாவே மாறிடுச்சு. "மாமா.. இது உங்க ஊரு இல்ல, எங்க ஊரு!"ன்னு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒன்னு சேர்ந்து மாமாவுக்குத் தண்ணி காட்டுறாங்க. ஒரு பக்கம் ரம் மாமாவோட டாலர் ஆசை, இன்னொரு பக்கம் டென்மார்க்கோட 'பனிப்படை' வீரம் - இதுல யாரு ஜெயிக்கப்போறாங்கன்னு தான் இப்போ உலகமே வேடிக்கை பார்த்துட்டு இருக்கு. ஆனா ஒன்னு பாஸ், அந்தப் பனிக்குள்ள மாமா இறங்குனா, கண்டிப்பா அவருக்கு 'ஜலதோஷம்' பிடிக்குறது கன்பார்ம்!

Post a Comment

Previous Post Next Post