வெறும் 28 வயதேயாகும் "காடே ரேணுகா" இவரை "Lady-Don" என்று வேறு அழைப்பார்களாம். இந்தப் பெண் தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வரை கள்ளத் தோணியில் வந்து கஞ்சாவை இறக்கி விட்டுச் சென்றுள்ளார். அந்த அளவு தொழில் சுத்தமானவர் என்று கூறுகிறார்கள். தற்போது ஆந்திர பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்துள்ள நிலையில், தன் முகத்தை முக்காடு போட்டு மறைத்துவிட்டார் இந்த கடே ரேணுகா... இருந்தாலும் ஒரு வழியாக தேடிப் பிடித்து இவர் போட்டோவை எடுத்துவிட்டோம்
தமிழகத்தில் பல வகையான கஞ்சா விற்கப்பட்டு வருகிறது. அதில் உயர் ரகம் என்று பேசப்படுவது , சீலாவதி வகை கஞ்சா தான். இதனை இந்தக் கும்பல், ஆந்திராவின் இருந்து தமிழ் நாடு கொண்டு வந்து, பின்னர் தமிழ் நாட்டில் இருந்து தனுஷ் கோடி வழியாக யாழ்ப்பாணம் கொண்டு வருவதில் கில்லாடிகள் என்று கூறப்படுகிறது. சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை என்ற போர்வையில் வலம் வந்தவர் தான் , இந்த 28 வயதாகும் காடே ரேணுகா... கடோ குமார் போல இவர் காடே ரேணுகா.
இந்த சிறிய வயதில் இவர் செய்திருக்கும் வேலை, எல்லாமே பெரிய வேலை தான். இவரோடு ஒரு பெரும் இளைஞர் பட்டாளமே இருக்கிறது. இருந்தாலும் வெறும் 8 பேரை தான் தற்போது ஆந்திரா பொலிசார் கைது செய்துள்ளார்கள். இவர் பல தடவை கள்ளத் தோணியில், யாழ் வந்து நேரடியாக கஞ்சாவை சப்பிளை செய்து திரும்பவும், தமிழகம் சென்றிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் உள்ள கடத்தல் கும்பலுக்கு இவர் மிகவும் பரீட்சையமானவர். தமிழக பொலிசார், யாழ் பொலிசார், மற்றும் ஆந்திரா பொலிசார் என்று பல தனிப்படை ரேணுகாவை பிடிக்க வலை வீசி வந்தது.
ஆனால் ஓடும் மீனில் நழுவும் மீனாக, தண்ணி காட்டி வந்தார் காடே ரேணுகா, இவருக்கு லேடி டான் என்ற பட்டப் பெயர் வேறு இருக்காம். ரேணுகா மற்றும் அவரது நண்பரான சூர்யா கலிதாஸ், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்புவதற்காக நர்சிபட்டினத்தில் வாடகை வீட்டில் தங்கி செயல்பட்டு வந்துள்ளனர். இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் ஸ்ருகாவரம் கிராமம் அருகே கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 74 கிலோ உலர் கஞ்சா, ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் விசாரணையில், ரேணுகா பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் வாடகை வீடுகளை எடுத்து தனது கடத்தல் வலையமைப்பை விரிவுபடுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. அடூரி பிரசாத் என்பவரின் உதவியுடன், ஒடிசாவின் பாலிமேலா மற்றும் சித்ரகொண்டா பகுதிகளில் உள்ள பழங்குடியினரிடமிருந்து கிலோக்கு இந்திய மதிப்பில் ரூ.5,000 வீதம் கஞ்சா வாங்கி வந்துள்ளார். காடுகளில் வாழும் பழங்குடி மக்களை தூண்டி, அவர்களை கொண்டே கஞ்சாவை பயிரிட்டு , அறுவடை செய்து கிலோவுக்கு 5,000 என்ற ரீதியில் இவர்கள் கொள்வனவு செய்கிறார்கள்.
ஆந்திர–ஒடிசா எல்லைப் பகுதிகளில் விளையும் கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வழமையாக கேரள கஞ்சா தான் இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கம். அட இலங்கைக்கு வரும் கஞ்சாவின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறதே... இந்த சின்னம் சிறிய இலங்கையில் எத்தனை பேர் கஞ்சா அடிக்கிறார்கள் ? நாளைய தலைமுறை என்னவாகப் போகிறது ? இதனை விட வெளிநாடுகள் சென்று குடியேறிய ஈழத் தமிழர்களின் பிள்ளைகள், மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்களே... தலைவன் இல்லாத தமிழ் இனம்... இதுதான் எண்ணத் தோன்றுகிறது !
