தமிழர்கள் அதிகம் வாழும், மிச்சம், குரைடனில் 1,200 கத்தி குத்து சம்பவங்கள் பதிவு

 


பிரிட்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் சில பகுதிகள், பல சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. 2025ம் ஆண்டு முடிவில் கணக்கிடப்பட்டுள்ள சர்வே அடிப்படையில் , மிச்சம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 1,200 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இது ஒட்டு மொத்த பிரித்தானியாவில் நடந்த 5,700 தாக்குதல் சம்பவங்களோடு ஒப்பிடும் போது, ஒரு குறித்த இடத்தில் அதிகம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்தப் பகுதிகள் மிகவும் பாதுகாப்பற்றவை என்றும். கவுன்சில் பல மில்லியன் பவுண்டுகளை பொலிசாருக்கு செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை விட அதிரும் சம்பவம் என்னவென்றால், குரைடனில் மட்டும் 3,214 தாக்குதல் சம்பவங்கள். இதில் பல நூறு கத்தி குத்து, வாளால் வெட்டுதல், மற்றும் சிறு ஆயுங்களை கொண்டு தாக்குவது என்று பல ரகமாக இருக்கிறது. 

ஒரு கத்தியோடு பொலிசாரிடம் அகப்பட்டாலே, 4 வருட சிறை கிடைக்கும் என்ற சட்டம் பிரித்தானியாவில் இருந்தும். கத்தியோடு வெளியே சுற்றும் இந்த பள்ளிச் சிறுவர்களை, பொலிசாரால் அடக்க முடியவில்லை. 12 வயது பள்ளிச் சிறுவர்களே கத்தியோடு அலைவது, பிரித்தானியா எங்கே செல்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெறும் 15 பள்ளி மாணவன் Luis Guembes  என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அதே SURREY பகுதியில் தான். 

அப்பாவோடு கடல்கரையில் மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று இந்த சிறுவன் உயிரோ இல்லை. 16வயது மற்றும் 15 வயது நிரம்பிய 2 சிறுவர்களை கொலை சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். பெயில் கொடுக்கவில்லை. லண்டன் தெருக்கள் மிகவும் பாதுகாப்பு அற்றவை என்று வெள்ளை இன மக்கள், கூறுகிறார்கள். அவர்கள் தமது வீடுகளை விற்று விட்டு வேறு இடங்கள் நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. 

பிள்ளைகளை பெற்றோர் ஒழுங்காக வளர்கிறார்களா ? இல்லை வேலை வேலை என்று ஓடி அலைந்து வாழ்கையை தொலைக்கிறார்களா என்பதே தெரியவில்லை. 
Summary Table: 2025 Stats
CategoryCroydonMitcham (Merton)
Violence with Injury~3,214~1,120
Knife-Enabled Crime~750+Lower (~250-300 est.)
Homicides (Est.)5–100–3

Post a Comment

Previous Post Next Post