GO BACK

கனிமொழி சொன்ன சொல்லால் அப்செட் ஆன ராகுல்: காங்கிரஸ் MLAக்கள் விலை போய் விடுவார்கள் !

தி.மு.க தனிப் பெரும்பான்மை பெறாவிட்டால் ஆபத்து!  காங்கிரஸ் MLAக்கள் விலை போய் விடுவார்கள் , என்று கனிமொழி ராகுலிடம் நேரடியாகச் சொல்ல, ராகுல் முகம் மாறியது. அருகில் நின்றிருந்த திமுகவினர் அரண்டு போனார்கள் 

தமிழகத்தில் வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் பேசுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க விரும்புவதால், டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியைச் சந்திக்க கனிமொழி எம்.பி அனுப்பப்பட்டார். இந்தச் சந்திப்பின் போது, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது போல, தமிழகத்திலும் 'ஆட்சியில் பங்கு' வேண்டும் என்ற கோரிக்கையை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

ராகுலின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த கனிமொழி, தமிழக அரசியல் வரலாற்றை முன்வைத்து மிக நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார். 1980 மற்றும் 2011 தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கு உடன்பட்டு கருணாநிதி அவர்கள் தொகுதிகளைப் பகிர்ந்து கொடுத்த போதிலும், அந்த இரண்டு முறையும் தி.மு.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதை அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை என்ற மரபைச் சுட்டிக்காட்டிய அவர், தி.மு.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே தற்போதைய சூழலில் பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமாக, பா.ஜ.க-வின் 'ஆபரேஷன் தாமரை' குறித்து கனிமொழி ஒரு பகீர் எச்சரிக்கையை ராகுலிடம் விடுத்துள்ளார். "சட்டசபை தேர்தலில் தி.மு.க-வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பா.ஜ.க சும்மா இருக்காது. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வளைத்து ஆட்சியைச் சீர்குலைக்க அவர்கள் முயற்சிப்பார்கள். இது தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றுவதற்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துவிடும்" என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விலைபோகும் வாய்ப்பு இருப்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால், மற்ற கூட்டணி கட்சிகளும் அதேபோல அதிக இடங்களைக் கேட்கும் என்றும், இது கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்றும் கனிமொழி விளக்கியுள்ளார். பா.ஜ.க-வின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமானால், தி.மு.க தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தினார். கனிமொழியின் இந்தத் தெளிவான மற்றும் அதிரடியான விளக்கத்தால், காங்கிரஸ் தரப்பு தற்போது யோசனையில் ஆழ்ந்துள்ளது.