ஊருடன் பகைத்து வேருடன் கெட்ட SK- 'பராசக்தி' படுத்தது இப்படி தான் !

 


"ஊருடன் பகைப்பின் வேருடன் கெடும்"னு நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? அது இப்போ நடிகர் சிவகார்த்திகேயனுக்கு (SK) அப்படியே பொருந்திப்போயிருக்கு. 'பராசக்தி' படத்தை மக்கள் மொத்தமா புறக்கணிச்சிட்டாங்க. ஆனா, திமுக அரசு மட்டும் விடாம, ஆயிரக்கணக்கான பேருக்கு 'இலவச டிக்கெட்' (Free Tickets) கொடுத்து எப்படியாவது தியேட்டரை நிரப்பப் பாக்குறாங்க.

ஆரம்பத்துல டிவியில இருந்து சினிமாவுக்கு வந்தப்போ, தனுஷ் தான் இவரைத் தூக்கி விட்டாரு. ஆனா, கை கொடுத்த தனுஷையே 'கழட்டி' விட்ட கதை ஊருக்கே தெரியும். அந்த துரோகத்துல ஆரம்பிச்சதுதான் இவரோட இந்த சரிவுன்னு சினிமா வட்டாரத்துல பேசிக்கிறாங்க.

அடுத்ததா சூர்யாவுக்கும் எஸ்கே செஞ்ச வேலைதான் இப்போ செம ஹாட் டாபிக். 'ஜெய் பீம்' பட விவகாரத்துல வன்னியர் சமூகம் எதிர்ப்பு தெரிவிச்சப்போ, சூர்யாவுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி நடிச்சுக்கிட்டே, பின்னாடி இருந்து ஒரு 'ஐடி விங்' (IT Wing) போட்டு சூர்யாவைப் பத்தி தப்பு தப்பா பரப்பி அவரை டேமேஜ் பண்ணியது சாட்சாத் இந்த SK தான்.

எதுக்காகன்னா, சூர்யாவை விட தான் பெரிய ஆளாகணும்ன்ற அந்த ஒரு பேராசைதான்! தனுஷை ஓரங்கட்டிட்டோம், சூர்யாவையும் மிஞ்சிட்டோம்னு இவரே ஒரு கணக்குப் போட்டுட்டு இருந்தப்போதான் 'பராசக்தி' வந்து இவருக்கு ஒரு பெரிய செக் வச்சிருக்கு.

விஜய் சார் கூட, தம்பி நல்லா வரட்டுமேன்னு தன்னோட 'கண்' (துப்பாக்கி) சீன் மூலமா இவரைத் தூக்கி விடப் பார்த்தாரு. ஆனா, எஸ்கே என்ன பண்ணாரு? விஜய் படத்தோடவே தன்னோட படத்தை மோத விட்டு, அவரோட இடத்தைப் பிடிக்கப் பார்த்தாரு.

இது எப்படின்னா, "சிவன் தலையிலேயே காலை வைக்கிற" கதைதான்! இது பத்தாதுன்னு டி.இமான் குடும்பத்துல இவரு பண்ண குழப்பங்கள்னு அடுக்கிக்கிட்டே போகலாம். இத்தனை பேருக்கு துரோகம் பண்ணிட்டு, தன்னோட முன்னேற்றம் மட்டுமே முக்கியம்னு நினைச்ச எஸ்கே-வுக்கு விழுந்த முதல் அடிதான் இந்த 'பராசக்தி' படத்தோட தோல்வி.

இப்போ அஜித், விஜய், சூர்யா, தனுஷ்னு எல்லா ஹீரோக்களோட ரசிகர்களும் ஒன்னு சேர்ந்து, "பராசக்தி ஒரு தீய சக்தி"ன்னு ஹேஷ்டேக் போட்டு வறுத்தெடுக்குறாங்க. இதுல திமுக எதிர்ப்பு அலையும் சேர்ந்துக்க, படம் இப்போ தியேட்டர்ல மூச்சுத் திணறிக்கிட்டு இருக்கு. படக்குழு 80 கோடி, 90 கோடின்னு என்னதான் பில்டப் (Build-up) கொடுத்தாலும், நிஜத்துல தியேட்டர் காலிதான்!

இனியாவது திருந்தி மத்தவங்களுக்கு மரியாதை கொடுத்தா இவரு தப்பிக்கலாம். இல்லன்னா, வடிவேலு ஒரு காலத்துல அரசியலால எப்படி காணாம போனாருன்னு எல்லாருக்கும் தெரியும், அதே நிலைமைதான் எஸ்கே-வுக்கும் வரும்னு சினிமா பண்டிதர்கள் அடிச்சுச் சொல்றாங்க!

Post a Comment

Previous Post Next Post