கரூர் சம்பவம்: SP "ஜோஷ் தங்கையா" ஆதாரங்களை அழித்து CBI-யிடம் சிக்கிக் கொண்டார் !


கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் CBI, தற்போது கரூர் எஸ்பி தங்கையா மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளதாகப் பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே, தனது மொபைல் போனில் இருந்து ஒரு 'முக்கிய புள்ளிக்கு' எஸ்.பி ஒரு Voice-Message அனுப்பிவிட்டு, அதை உடனடியாக டெலீட் செய்துள்ளார். ஆதாரத்தை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்ட இந்தச் செயல் (Evidence tampering), சிபிஐ அதிகாரிகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் போலீசார் தங்களுக்குத் தோன்றியபடி FIR பதிவு செய்து, அதில் TVK கட்சியின் பல முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்களைக் குற்றவாளிகளாகச் சேர்த்துள்ளனர். "நாங்கள் எச்சரித்தும் கேட்காமல் விஜய்யின் பேருந்து முன்னேறிச் சென்றதால்தான் நெரிசல் ஏற்பட்டது" என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், போலீசாரின் இந்த வாதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை (No solid evidence) என்பதை சிபிஐ தற்போது கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விசாரணையின் போக்கு தற்போது போலீஸ் பக்கம் திரும்பியுள்ளது.

விஜய்க்கோ அல்லது அவரது கட்சியின் நிர்வாகிகளுக்கோ மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று போலீசார் எந்த இடத்திலும் அறிவுறுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது. "முதலில் போன் மூலம் தகவல் சொன்னோம்" என்று கூறிய போலீசாரிடம், அதற்கான Call Records-களை சிபிஐ கேட்டபோது அவர்களால் காட்ட முடியவில்லை. இதையடுத்து, "நாங்கள் பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்தோம்" என்று போலீசார் மாற்றிப் பேசினர். ஆனால், அந்தப் பகுதியின் முழு நீள CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், போலீசார் ஓட்டுநரிடம் அப்படி எதையும் சொல்லவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

போலீசார் திட்டமிட்டே பொய் சொல்வதால், கரூர் சம்பவத்தில் ஏதோ ஒரு சதி (Conspiracy) இருப்பதாக சிபிஐ நம்புகிறது. இதில் கரூர் போலீசாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, TVK தலைவர் விஜய்யை சிபிஐ நேரில் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் (Official statement) பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் இந்த வழக்கில் பல 'முக்கிய புள்ளிகள்' சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post