கசந்து போனதா லிவ்இன்: காதலன் களற்றி விட பெண் செய்த செயலைப் பாருங்கள் !


பெங்களூருல ஒரு ஐடி கம்பெனில வேலை செய்யுற ஆந்திரா பொண்ணு சரஸ்வதிக்கும், நம்ம ராமநாதபுரத்து பையன் கோபிக்கும் நடுவுல செம்ம லவ்வு ஓடிருக்கு. கோபி வேலூர்ல ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தப்போ, ரெண்டு பேரும் பெங்களூருல ஒரே வீட்டுல கணவன் - மனைவி மாதிரி 'லிவ்-இன்' ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்காங்க. "உன்னதான் கல்யாணம் பண்ணிக்குவேன்"னு கோபி கொடுத்த சத்தியத்தை நம்பி அந்தப் பொண்ணும் அவனையே கதி-ன்னு இருந்துருக்கு.

ஆனா பாருங்க, திடீர்னு ஒரு நாள் கோபி அந்தப் பொண்ணை கழட்டிவிட்டுட்டு, போன் நம்பரையும் பிளாக் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிட்டான். இதனால கடுப்பான சரஸ்வதி வேலூர் போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ்னு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கு. ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன்லயும் ஏற்கனவே ஒரு புகார் கொடுத்தும் எந்த மேட்டரும் நடக்கல. இதனால நேத்து டைரக்டா ராமநாதபுரம் ஓம் சக்தி நகர்ல இருக்குற கோபி வீட்டுக்கே அந்தப் பொண்ணு விசிட் அடிச்சிருச்சு.

சரஸ்வதி வாசல்ல நிக்கிறத பார்த்ததும் கோபியோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் அலறிட்டாங்க. அந்தப் பொண்ணை வீட்டுக்குள்ள விடாம வாசல்லயே நிக்க வச்சுட்டு, "இரு இரு... இதோ வரோம்"னு சொல்லிட்டு வீட்டைப் பூட்டிட்டு அவசர அவசரமா வெளியே ஓடிட்டாங்க. இதை பார்த்ததும் அந்தப் பொண்ணுக்கு செம்ம காண்டாகி, "என்னை ஏமாத்திட்டீங்களே!"னு அழுதுகிட்டே அங்கேயே தரையில உட்கார்ந்து தர்ணா பண்ண ஆரம்பிச்சுருச்சு. ஏரியா ஜனமெல்லாம் அங்க கூடி ஒரே பரபரப்பாயிடுச்சு.

விஷயம் கேள்விப்பட்டு கேணிக்கரை போலீஸ் அங்க வந்து, "வாம்மா... ஸ்டேஷனுக்கு போலாம்"னு கூப்பிட்டு இருக்காங்க. ஆனா சரஸ்வதி, "ஏற்கனவே புகார் கொடுத்தப்போ என்ன பண்ணீங்க? இப்போ எதுக்கு வரணும்?"னு நச்சுனு கேட்டு வர மறுத்துருச்சு. அப்புறம் போலீஸ்காரங்க கெஞ்சி, "கண்டிப்பா ஆக்‌ஷன் எடுக்குறோம்"னு சொன்னதுக்கு அப்புறம் வண்டியில ஏறி போயிருக்கு. என்னவோ போங்கப்பா... இப்போ இருக்குற லவ்வுங்க எல்லாம் பாக்குறதுக்கு நல்லாதான் இருக்கு, ஆனா கடைசில இப்படித்தான் பஞ்சாயத்துல முடியுது!

Post a Comment

Previous Post Next Post