பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் மட்டுமில்லாமல், அமெரிக்கா மற்றும் கனடா எனப் பல உலக நாடுகள்ல 'ஜனநாயகன்' படத்தோட ரிலீஸ் இப்போ கேன்சல் ஆகிடுச்சு. ரிலீஸுக்காகக் காத்திருந்த திரையரங்குகள், வேற வழியில்லாம முன்பதிவு செஞ்ச டிக்கெட் பணத்தை இப்போ 'ரீபண்ட்' பண்ணிட்டு வராங்க. இதெல்லாத்துக்கும் நம்ம ஊரு தணிக்கைக் குழு பண்ற சித்து விளையாட்டுதான் காரணம். இப்படி ஒரு சூழல் இருந்தா, நாளைக்கு எந்தத் தயாரிப்பாளர் தான் தமிழ்நாட்டுல படம் எடுக்க முன்வருவாங்க? இந்தத் தொழிலை நம்பி இருக்குற ஆயிரக்கணக்கான குடும்பங்களோட நிலையை நினைச்சுக்கூடப் பார்க்காம இப்படிப் பண்றது ரொம்பவே அவமானமான விஷயம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு நடிகரைப் பார்த்து (விஜய்) இந்த அளவுக்கு அஞ்சுறாங்கன்னா, அது அவங்களுக்குத்தான் அவமானம். விஜய்க்குத் தொடர்ந்து இப்படிப் பிரச்சனைகளைக் கொடுத்தா, சாதாரண மக்கள் மத்தியில தானாவே அவர் மேல ஒரு அனுதாபம் பிறக்கும். விஜய் ரசிகர்கள், தொண்டர்களைத் தாண்டி, ஒரு பக்கம் கூடச் சாயாம இருக்குற நடுநிலையான பொதுமக்களும் இப்போ விஜய் பக்கம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. 'விஜய் பாவம்'ங்கிற மனநிலைக்கு மக்களைத் தள்ளுற இந்தச் சின்ன லாஜிக் கூடவா தணிக்கைக் குழுவுக்குத் தெரியாமப் போச்சு?
ஜனநாயகன் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கின் போது, தணிக்கைக் குழு அதிகாரி பேசுன விதம் இப்போ பெரிய விவாதமாகி இருக்கு. "இதுக்கும் தமிழக அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை"னு அவரே வாயைத் திறந்து சொல்லி மாட்டிக்கிட்டாரு. அவர் யாரைக் காப்பாத்தப் பார்க்குறாருங்கிறது இப்போ வெட்டவெளிச்சமாத் தெரிஞ்சுடுச்சு. மொத்தத்துல, பொங்கல் பண்டிகை முடிஞ்சதுக்கு அப்புறம் சாவகாசமா சான்றிதழ் கொடுத்தா படம் பெரிய வெற்றியை அடையாதுன்னு யாரோ ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த பிளானை தணிக்கைக் குழு நிறைவேத்துறாங்க.
திட்டமிட்டபடி பொங்கலுக்குப் படம் வராமப் பண்ணிட்டா, விஜய்யோட அரசியல் வளர்ச்சியைத் தடுத்துடலாம்னு யாரோ கணக்குப்போடுறாங்க. ஆனா, இந்த மாதிரி ஒரு கேவலமான அரசியலை மக்கள் கவனிச்சுட்டுத்தான் இருக்காங்க. ஒரு கலைஞனோட படைப்பை இப்படி முடக்குறதுக்குச் சொல்ற காரணங்கள் எதுவுமே நியாயமா இல்லை. இந்தத் தணிக்கைக் குழுவோட செயல்பாடுகள் ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவையுமே உலகத் தமிழர்கள் மத்தியில தலைகுனிய வச்சிருக்கு. இதைவிட ஒரு கேவலமான அரசியல் வேற எதுவும் இருக்க முடியாது.
