நாளைக்கு டெல்லியில சி.பி.ஐ (CBI) விசாரணைக்காக டி.வி.கே (TVK) தலைவர் விஜய் ஆஜராகப் போறாரு. இன்னைக்கு ஈவினிங் 5:30 மணிக்கே தனி பிளேன்ல டெல்லி போய் இறங்கிட்டாரு மனுஷன். ஏர்போர்ட்ல இருந்து அவர் தங்கப் போற ஸ்டார் ஹோட்டலுக்கு டெல்லி போலீஸ் செம கெத்தா, பயங்கர பாதுகாப்புல கூட்டிட்டுப் போயிருக்காங்க. அவர் தங்கியிருக்கிற ஹோட்டலைச் சுத்தியும் இப்போ போலீஸ் படைதான் நிக்குது.
நாளைக்கு விஜய் ஹோட்டல்ல இருந்து சி.பி.ஐ ஆபீஸ்க்குப் போற ரூட் முழுக்க போலீஸை நிறுத்தி வைக்க ஆர்டர் போட்டிருக்காங்க. ஒரு மாநில முதலமைச்சருக்கே இந்த அளவுக்குப் பாதுகாப்பு கொடுப்பாங்களான்னு தெரியல, ஆனா ஒரு சென்ட்ரல் மினிஸ்டருக்குக் கொடுக்கிற ரேஞ்சுக்கு விஜய்க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறதுல என்ன மேட்டர் இருக்கும்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.
டெல்லியில விஜய்க்கு சின்னதா ஒரு அசம்பாவிதம் நடந்தா கூட, அது இந்தியா முழுக்கப் பெரிய ஒரு பேசு பொருளா மாறிவிடும் இல்லையா ?. "விசாரணைக்கு வரச் சொல்லிட்டு விஜயைப் போட்டுத் தள்ளப் பார்க்குது மத்திய அரசு"ன்னு கெட்ட பேரு வந்துடும்னு டெல்லி பயப்படுது. எது நடந்தாலும் சி.பி.ஐ தான் பொறுப்புங்கிறதால, இந்த பாதுகாப்பு மேட்டர்ல ரொம்பக் கண்ணும் கருத்துமா இருக்காங்க. சென்னையில அவருக்கு இருக்கிற செக்யூரிட்டியை விட, பல மடங்கு வெயிட்டான பாதுகாப்பை டெல்லி போலீஸ் கொடுக்கிறதுக்கு இதுதான் காரணமாம்.
நாளைக்கு நடக்கப்போற விசாரணையில, விஜய்யோட பாடி கார்ட்ஸையும் (Bodyguards) விசாரிக்கப் போறதா சி.பி.ஐ சொன்னதால அவங்களும் டெல்லி போயிருக்காங்க. இதுதான் கடைசி விசாரணையா இருக்கும்னு ஒரு பேச்சு ஓடுது. இதற்கிடையே, டெல்லியில அவர் ராகுல் காந்தியைச் சந்திக்கவும் சான்ஸ் இருக்கிறதா ஒரு தகவல் கசிஞ்சிருக்கு. இது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியல, ஆனா காங்கிரஸோட பெரிய தலை ஒருத்தர் விஜய்யைச் சந்திக்கப் போறது மட்டும் கன்பார்ம்னு சொல்றாங்க.
