பிரிட்டன் மீண்டும் 2020க்கு செல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. எப்படி 2020 கொரோனாவுக்கு பின்னர் பிரித்தானியா பெரும் சரிவை சந்திதததோ அதே போன்ற ஒரு நிகழ்வு நடக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. இம்முறை கொரோனா ரூபத்தில் வந்திருப்பது வேறு யாரும் அல்ல சாட் சாத் இந்த ரம் தான் !
வரும் பிப்ரவரி 1 முதல் 10% வரி மற்றும் ஜூன் 1 முதல் 25% என ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த 'டாரீஃப்' (Tariff) உயர்வு, ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் பிரிட்டன் பொருளாதாரத்தை ஒரு மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு (Recession) தள்ளக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்."அமெரிக்காவை இனி ஒரு நம்பகமான வர்த்தகக் கூட்டாளியாக (Reliable Partner) கருத முடியாது" என்கிற அச்சம் இப்போது பிரிட்டன் அரசியல் வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது.
இந்த அதிரடி வரி உயர்வால் பிரிட்டனின் கார் உற்பத்தி, மருந்துகள் (Pharmaceuticals) மற்றும் இயந்திரங்கள் (Machinery) எனப் பல முக்கியத் துறைகள் சுமார் 6 பில்லியன் பவுண்டுகள் வரை இழப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் கடந்த கால வரிகளால் பெரும் சரிவைச் சந்தித்த நிலையில், இந்த புதிய வர்த்தகப் போர் (Trade uncertainty) பிரிட்டன் சந்தையை ஒரு 'மிக்ரேன்' (Migraine) போன்ற தலைவலியாக மாற்றியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையை "முற்றிலும் தவறானது" என வெளிப்படையாகக் கண்டித்துள்ளார். "கிரீன்லாந்து ஒன்றும் விற்பனைக்கு அல்ல, அது டென்மார்க்கின் இறையாண்மைக்கு (Sovereignty) உட்பட்டது" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதால், அட்லாண்டிக் கடலின் இருபுறமும் பதற்றம் அதிகரித்துள்ளது. ட்ரம்ப்பின் இந்த பிடிவாதமான 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' (America First) கொள்கையால், பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகள் இப்போது தங்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய வழிகளைத் தேட வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு சீனாவே மாற்று வழி என்பதால் , பல நாடுகள் சீனாவோடு நல்லுறவை வளர்க்க விரும்புகிறது. சமீபத்தில் கனடா நாட்டு பிரதமர் சீனா சென்ற விடையம், இன்னும் சூடாகப் பேசப்பட்டு வருகிறது. உலகமே சீனா நோக்கி நகரத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
