ஜன நாயகன் படத் தயாரிப்பாளர், தணிக்கை குழு மீது போட்ட வழக்கை வாபஸ் வாங்கிட்டு, மறு ஆய்வு குழுவோட (Review Committee) சமரசம் பேசிக்கிட்டு இருக்காராம். "இனிமே சண்டையெல்லாம் வேணாம்ப்பா... பேசாம அட்ஜஸ்ட் பண்ணி போயி சர்டிபிகேட்டை வாங்கிட்டு படத்தை ரிலீஸ் பண்ணுவோம்"னு தயாரிப்பு நிறுவனம் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. ஆனா, இந்த மேட்டர் இன்னும் தளபதி விஜய்க்குத் தெரியாதாம்! ஏன்னா, ஆரம்பத்திலேயே "வழக்கை போடுங்க, பாத்துக்கலாம்"னு ஐடியா கொடுத்ததே நம்ம விஜய் தானாம்.
டெல்லி உச்ச நீதிமன்றம் வரைக்கும் போயும் அங்கே சரியான பதில் கிடைக்கல. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரெண்டு நீதிபதிகள் கொண்ட குழு தள்ளுபடி செஞ்சு, "திரும்பவும் அதே நீதிபதிக்கே போங்க"ன்னு பழைய இடத்துக்கே அனுப்பி வச்சிட்டாங்க. இப்படி சர்டிபிகேட் வாங்குறதுல ஜன நாயகனுக்கு அடுத்தடுத்து பெரிய சவாலா மாறினதால, இந்த படத்தை யாரோ ஒரு 'வெரி வெரி பவர்ஃபுல்' நபர் பின்னாடியிருந்து டைரக்டா தட்டி தூக்குறாருன்னு தயாரிப்பு தரப்புக்கு இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு.
"சட்ட ரீதியா எதிர்க்க எதிர்க்க நமக்குத் தான் பின்னடைவு வரும்"னு தயாரிப்பு நிறுவனம் லேட்டா உணர்ந்துட்டாங்க. இது டெல்லி சம்பந்தப்பட்ட 'வெயிட்டான' விஷயம்... அந்த நபரை எதிர்த்தா படத்தோட எதிர்காலமே அம்போன்னு எச்சரிக்கையும் வந்திருக்கு. இதனால "பணிஞ்சு போறதுல தப்பில்லை"னு முடிவு பண்ணி, நேத்து (29-ம் தேதி) தணிக்கை குழுவை ரகசியமா சந்திச்சு தயாரிப்பாளர் பேசிட்டாரு.
அங்கே நடந்த பேச்சுவார்த்தையில சில உடன்பாடுகள் எட்டப்பட்டதா இன்னைக்கு (30-ம் தேதி) தகவல் கசிஞ்சிருக்கு. இந்தியாவோட மிக சக்திவாய்ந்த அமைச்சர்களில் ஒருத்தர் தான் படத்தை வெளியிட விடாம முட்டுக்கட்டை போடுறதா ஒரு பேச்சு ஓடுது. கரூர் சம்பவத்துல அந்த அமைச்சர் விஜய்க்கு சில உதவிகளை செஞ்சிருக்காராம். பதிலுக்கு "நம்ம கூட கூட்டணிக்கு வாங்க"ன்னு அந்த அமைச்சர் கெஞ்சியும் விஜய் அசைஞ்சு கொடுக்கலையாம். இதனால 'கடுப்பான' அமைச்சர், தன்னோட பவர் என்னன்னு காமிச்சுட்டாரு. அவ்ளோதான் விஷயம்!
தலைவன் விஜய்க்கு கூட சொல்லாம, தயாரிப்பாளர் கிளம்பிப் போய் தணிக்கை குழுவோட காம்ப்ரமைஸ் ஆகிட்டாரு. அதனால 'ஜன நாயகன்' சீக்கிரமே திரையரங்குக்கு வரப்போறது கன்பார்ம்!
