Weather Report : இன்றைய காலநிலை- முக்கிய நகரங்களில் மழை வருமா ?


 

இன்று (16) தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வறண்ட மற்றும் இதமான வானிலை நிலவும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது. மேலும் முக்கிய நகரங்களின் வானிலை அறிக்கை கீழே இணைக்கபப்ட்டுள்ளது. 

ஜனவரி 16, 2026, தமிழகம் முழுவதும் 'திருவள்ளுவர் தினம்' மற்றும் 'மாட்டுப் பொங்கல்' வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. உலகப் பொதுமறை தந்த வள்ளுவரைப் போற்றும் வகையில் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதுடன், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாடுகளுக்குப் பூமாலை அணிவித்து, பொங்கலிட்டு வழிபட மக்கள் தயாராகி வருகின்றனர். மேலும்,  பொங்கல்' பண்டிகையையொட்டி மெரினா கடற்கரை மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகரம்அதிகபட்ச வெப்பநிலைகுறைந்தபட்ச வெப்பநிலைவானிலை நிலை
சென்னை28°C22°Cதெளிவான வானம் / வெயில்
கோயம்புத்தூர்31°C19°Cஇதமான வெயில்
மதுரை32°C21°Cஅதிக வெயில்
திருச்சி32°C20°Cதெளிவான வானம்
திருப்பூர்31°C19°Cவெயில்
சேலம்31°C18°Cவறண்ட வானிலை
ஈரோடு32°C18°Cஇதமான குளிர் (இரவு)
திருநெல்வேலி31°C22°Cமேகமூட்டம் (சில இடங்களில்)
வேலூர்30°C17°Cஅதிகாலை பனி / பகல் வெயில்
தூத்துக்குடி30°C23°Cகாற்றுடன் கூடிய வெயில்

Post a Comment

Previous Post Next Post