GO BACK

ஈரானுக்குப் பின்னணியில் ரஷ்யா- சீனா: புதுவகையான ட்ரோன்களை இயக்கும் ஈரான் ராணுவம் !


 ஈரானுக்குப் பின்னால் ரஷ்யா மற்றும் சீனா அணிவகுத்துள்ள நிலையில், அந்நாட்டு ராணுவம் தற்போது புதிய வகை ட்ரோன்களை (Drones) இயக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரம்மாண்டமான கப்பல் படை ஒன்றை ஈரானுக்கு அருகே நிலைநிறுத்தி மிரட்டல் விடுத்து வரும் சூழலில், நேற்று (பிப்ரவரி 01) ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

அமெரிக்காவின் கடற்படையை எதிர்கொள்ள ஈரான் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு வருகிறது. தனது ராணுவப் பிரிவில் அதிநவீன ட்ரோன்கள் பலவற்றை ஈரான் இணைத்துள்ளது. இவை சீனாவால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. இந்த ட்ரோன்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், இவை எதிரி நாட்டு ராடார் (Radar) திரையில் தென்படாது. மேலும், மின்னணு சாதனங்களைச் (Electronic devices) செயலிழக்க வைக்கும் தனித்துவமான தொழில்நுட்பமும் இவற்றில் உள்ளதாகத் தெரிகிறது.

சுமார் 1500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய இந்த ட்ரோன்கள் மூலம், அமெரிக்காவின் ‘ஆர்மேடா’ (Armada) எனப்படும் பெரும் கப்பல் படையைத் தகர்க்க முடியும் என ஈரான் நம்புகிறது. இதற்கிடையே, அமெரிக்கக் கப்பல் படையில் உள்ள மின்னணு சாதனங்களைச் முடக்கும் கருவிகளை ரஷ்யா வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறமிருக்க, நீண்டகாலப் பகைவர்களான ஈராக்கும் ஈரானும் தற்போது கைகோர்த்திருப்பதுதான் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

"ஈரானைத் தாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று ஈராக் அறிவித்துள்ளது அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மத்திய கிழக்கில் உள்ள பல அரபு நாடுகள் தங்களது வான்வழி மற்றும் தரைதளங்களை அமெரிக்கா பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. இதன் காரணமாகவே அமெரிக்கா தனது விமானம் தாங்கி கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகே நிறுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் ஈரானைத் தாக்குவது பெரும் எதிர்வினைகளை உருவாக்கும் என்பதால், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு இது குறித்த விரிவான அறிக்கையை டொனால்ட் டிரம்பிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Electronic devices