விஜய் மீது வழக்குகளை போடும் தனி நபர்கள்- பழம் பெரும் நாடகம் ஆரம்பம் !

ஒரு அரசியல்வாதிக்கு எப்படி எல்லாம் குடைச்சலைக் கொடுக்கவேண்டும் என்று, PHD டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தான் திமுக என்னும் தீயசக்த்தி பிரமுகர்கள். தற்போது விஜய் மீது வழக்குகளை போட்டு அவரை, நீதிமன்றம் ஏறி இறங்க வைத்தால் , தேர்தல் பிரச்சாரங்கள் தடைப்படும் என்ற கணக்கை போட்டுள்ளது ஆழும் திமுக அரசு. இதன் ஒரு அங்கம் தான், தூத்துக்குடி தொழிலதிபர் வக்கீல் நோட்டிக்ஸ் அனுப்பியுள்ள விடையம். 

தான் தவெகவில் இணைந்ததாக பொய் தகவல், வெளியானதாகவும் இதற்காக விஜய் அவர்கள் தனக்கு 1கோடி ரூபா தரவேண்டும் என்று வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார் ஒரு தூத்துக்குடி பிரமுகர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததாக பொய்யான தகவல் அளித்ததாக தவெக தலைவர் விஜய், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென கேட்டு குரும்பூர் தொழிலதிபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே மாவடிபண்ணையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் பண்ணையார். இவர் விவசாயம், செங்கல் சூளை, கல் குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மகன் நிவாஸ் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர், தொழிலபதிபர் கண்ணன் பண்ணையாரும், அவரது மகன் நிவாஸும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். 

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் தொழிலதிபர் கண்ணன் பண்ணையார் தன் பெயரை தவறுதலாக பயன்படுத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறி தவெக தலைவர் விஜய் மற்றும் தவறான செய்தி கொடுத்த மாவட்ட செயலாளர் பிரைட்டருக்கும் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதில் மிகவும் வேடிக்கையான விடையம் என்னவென்றால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அதிமுக கட்சியில் இருந்தாலும், இவரை தூண்டி விட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பச் சொன்னதும், இதனைக் கையாள்வதும், திமுக வழக்கறிஞர் என்பது தான். 


Previous Post Next Post

Contact Form