விழாவின் போது, King Charles ஒரு air defence missile launcher கருவியின் sight unit வழியாக நோக்கி, எதிரி drone-ஐ குறிவைப்பது எப்படி என்பது குறித்து விளக்கமறிந்தார். அவர் ஆயுதத்தை பயன்படுத்தி சுடவில்லை என்றாலும், பாதுகாப்பு அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் கவனமாக ஆய்வு செய்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, short-range மற்றும் medium-range பாதுகாப்புத் திறன்களை வெளிப்படுத்தும் எட்டு நிமிட immersive air defence demonstration நடைபெற்றது.
இந்த பயிற்சியில் மூன்று அலைகளாக drone தாக்குதல்கள் மற்றும் இரண்டு armoured vehicles களையும் உள்ளடக்கிய simulation நடத்தப்பட்டது. நேரடி live link மூலம் வெளிநாட்டில் பணியில் இருக்கும் வீரர்களுடன் உரையாடிய King Charles, அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் குடும்பங்களை “amazing” என பாராட்டினார். பாதுகாப்பு மற்றும் தயார்நிலை குறித்த இந்த நிகழ்வு, தற்போதைய உலக பாதுகாப்பு சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஹெலிகாப்டரில் வந்து சேர்ந்த King Charles-ஐ 21 gun salute மரியாதையுடன் வரவேற்றனர். நூற்றுக்கணக்கான வீரர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, UK பாதுகாப்பு அமைப்பின் தயார்நிலை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், air defence திறன்களை வலுப்படுத்தும் முயற்சிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
