Bloomberg வெளியிட்ட தகவலின்படி, Pentagon அனுமதியுடன் உருவாக்கப்பட்ட இந்த Task Force Scorpion பிரிவு self-detonation திறன் கொண்ட kamikaze drone களை பயன்படுத்தவுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் 2003 Iraq போருக்குப் பின் மிகப்பெரிய அளவிலான ராணுவ தயாரிப்பாக இது பார்க்கப்படுகிறது. The Wall Street Journal குறிப்பிட்டபடி, சமீபத்திய பேச்சுவார்த்தை சுற்று எந்த உடன்பாட்டும் இல்லாமல் முடிவடைந்துள்ளது.
அமெரிக்காவின் Special Envoy Steve Witkoff மற்றும் Jared Kushner தலைமையில் அமெரிக்க பிரதிநிதிகள் கடைசி கட்ட தூதரக முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போரை தவிர்க்கும் நோக்கில் இன்னும் ஒரு diplomatic push மேற்கொள்ளப்பட்டாலும், நிலைமை பதற்றமாகவே உள்ளது. U.S. Central Command பேச்சாளர் Tim Hawkins, “புதிய combat drone திறன்களை விரைவாக களமிறக்க இந்த பிரிவு உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
Arabian Gulf பகுதியில் கடந்த டிசம்பரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்த ட்ரோன்களின் ஒவ்வொன்றும் சுமார் $35,000 செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் ஈரானின் அணு வசதிகள், சாலை வலையமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைக்கும் வகையில் இவை பயன்படுத்தப்படலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா–ஈரான் உறவுகள் மீண்டும் பதற்ற நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன.
