தல அஜித் கலந்து கொள்ள இருந்த Formula One கார் ரேஸ் கேன்சல் சவுதி அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அடுத்த மாதம் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய ஃபார்முலா 1 (F1) பந்தயங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகப் புகழ்பெற்ற கார் பந்தய வீரரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான அஜித் குமார் இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பந்தய வீரராக அவர் இதில் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கும், கார் பந்தய ஆர்வலர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் தீவிரமடைந்து வருவதால், பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் சுமார் 3,000 ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை ஃபார்முலா 1 நிர்வாகம் எடுக்கவுள்ளது. அடுத்த வாரம் நடுப்பகுதியில் பந்தயத்திற்கான கார் மற்றும் இதர தளவாடங்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளதால், இன்னும் 48 மணி நேரத்திற்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் பந்தய அட்டவணையில் சுமார் ஒரு மாத கால இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது.

ஃபார்முலா 1 தலைமை நிர்வாகி ஸ்டெபானோ டொமினிகாலி மற்றும் எஃப்.ஐ.ஏ தலைவர் முகமது பின் சுலாயேம் ஆகியோர் அந்தந்த நாட்டு விழா ஏற்பாட்டாளர்களுடன் இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பல மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்பட்டுள்ள போதிலும், விலைமதிப்பற்ற மனித உயிர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்தப் பந்தயங்களை ரத்து செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் ஃபார்முலா 1 தொடரின் மிக முக்கியமான மற்றும் அதிக வருவாய் ஈட்டித் தரும் களங்களாகத் திகழ்கின்றன.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா பந்தயங்கள் முறையே 40 மில்லியன் மற்றும் 60 மில்லியன் பவுண்டுகளை உரிமக் கட்டணமாக வழங்குகின்றன. கத்தார் நாட்டுடன் இணைந்து, இந்த பந்தயங்களே எஃப் 1 காலண்டரில் அதிக லாபம் தரும் இடங்களாக உள்ளன. இருப்பினும், தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் பந்தயங்களை நடத்துவது சாத்தியமற்றது என்பதால், இந்தத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. இது சர்வதேச விளையாட்டு உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Previous Post Next Post

Contact Form