அடிக்க அடிக்க மீண்டு எழும் ஈரன்: நடப்பது தெரியாமல் நிலை குலைந்த ரம் !

4,300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைத் தரை மற்றும் கடலில் இருந்து ஏவிவிட்டது அமெரிக்கா. மேலும், சுமார் 500-க்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனைவிட இஸ்ரேல் தனது பங்கிற்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்துவிட்டது. "ஈரான் ராணுவத்தை முற்றாக அழித்துவிட்டோம்" என்று டிரம்ப் தெரிவித்த அடுத்த அரை மணி நேரத்தில், ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை (Embassy) ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

மேலும் நேற்று (14) மற்றும் இன்று அதிகாலை (15) ஈரானில் இருந்து தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இன்றும் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. தொடர்ந்து ஆளில்லா தற்கொலை விமானங்களை அனுப்பித் துல்லியமாகத் தாக்குகிறது. ஈரானைப் பொறுத்தவரை அது இன்னும் நிலைகுலையவில்லை. டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொல்வது எல்லாமே நம்பத்தகுந்ததா என்ற சந்தேகம் தான் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தான், 5,000 நேவி சீல் (Navy SEALs) படையினரை அனுப்பி, ஈரானின் ஒரு சிறிய பகுதியைக் கைப்பற்றுவது என்று டிரம்ப் ஒரு திட்டத்தைத் தீட்டினார். ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர், "இது ஒரு தற்கொலை முயற்சி" என்று கூறி பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றமும் (Congress) இதனை எதிர்த்துள்ளது. இதனால் இந்தத் திட்டத்தைத் டிரம்ப் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் படைகளைத் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போல இது ஒரு எளிதான போர் அல்ல என்பதைத் தற்போது டிரம்ப் உணர்ந்திருப்பார். ஈரானில் ஆயிரக்கணக்கான போலியான தளங்கள் இருக்கின்றன. இந்தத் தளங்கள் தொடர்பாகப் பல பொய்யான தகவல்களை, அமெரிக்காவுக்கு வேலை செய்யும் ஈரானில் உள்ள உளவாளிகளே அமெரிக்கப் புலனாய்வு அமைப்பிற்குச் சொல்லி, அவர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளார்கள். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல தளங்களைத் தாக்கி அழித்ததாக நினைக்கின்றன; ஆனால் அங்கே எதுவுமே இல்லை. இதனை ஈரான் ராணுவம் மிகவும் துல்லியமாகத் திட்டம் போட்டுச் செயல்படுத்தி வருகிறது.

இந்தப் போர் அமெரிக்கா நினைப்பது போல உடனே முடியப்போவது இல்லை; வருடக்கணக்கில் நீடிக்க வாய்ப்புள்ளது. இதனை விட, அமெரிக்காவுக்கு உதவிய ஏனைய அரபு நாடுகள் தற்போது "ஏனடா அமெரிக்காவுக்கு உதவினோம்" என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

Previous Post Next Post

Contact Form