ஈரானுக்குள் நுழையும் 5,000 அமெரிக்க வீரர்கள் - சற்றுன் முன் ரம் அறிவிப்பு

 

மத்திய கிழக்கில் நிலவி வரும் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் இன்று 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், சுமார் 5,000 கூடுதல் அமெரிக்கக் கடற்படை வீரர்கள் (Marines) மற்றும் மாலுமிகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் "கார்க் தீவு" (Kharg Island) மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தப் போர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. USS திரிப்போலி (USS Tripoli) என்ற பாரிய போர்க்கப்பல் மூலமாக இந்த 5,000 வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். ஹார்முஸ் நீர்ச்சந்தியை (Strait of Hormuz) ஈரானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்தைச் சீர் செய்வதே இந்த வீரர்களின் முதன்மை இலக்கு என்று வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கா, இப்போது தரைவழித் தாக்குதலுக்கும் (Ground Invasion) தயாராகி வருவதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் கடற்கரை ஓரங்களில் தரைப்படையை இறக்கி, அங்குள்ள ஏவுகணைத் தளங்களைக் கைப்பற்ற இந்த 5,000 வீரர்கள் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. ஈரானின் புதிய உச்சகட்டத் தலைவர் கமேனி, "அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் தொடரும்" என எச்சரித்துள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானுக்குக் கொடுக்கப்படும் இறுதி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் அமெரிக்காவை மேலும் கோபமடையச் செய்துள்ளது. "ஈரான் ஏற்கனவே தோற்றுவிட்டது, அவர்கள் இப்போது சரணடைய வேண்டும்" என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் தனது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தாததால், போர் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தெரியவில்லை. அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) கூறுகையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு 90% சிதைக்கப்பட்டுவிட்டதாகவும், எஞ்சியுள்ளவற்றை முடிக்கவே இந்த மேலதிகப் படைகள் அனுப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்தத் திடீர் படை நகர்வால் கச்சா எண்ணெய் சந்தை கடும் அதிர்ச்சியில் உள்ளது. சவூதி அரேபியா, துபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகள் ஏற்கனவே ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்தத் தரைப்படை வருகை ஒரு முழுமையான பிராந்தியப் போருக்கு (Regional War) வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த 5,000 வீரர்கள் ஈரானுக்குள் நுழைந்தால், அது 1979-ம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக இருக்கும். அடுத்த சில தினங்களில் அமெரிக்கா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்று டிரம்ப் அறிவித்துள்ளதால், உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Previous Post Next Post

Contact Form