இன்று கூட விஜய் தங்கள் பக்கம் வருவார் என கனவு காணும் BJP

"அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பார்கள். அதுபோல ஒரு மனிதருக்குத் துன்பம் மேல் துன்பம் வந்தால் பல முடிவுகளை எடுக்க நேரிடும். அந்த வகையில் முதலில் கரூர் சம்பவம், அதன் பின்னர் 'ஜனநாயகம்' திரைப்படம், அதற்கு அடுத்து திரிஷா விவகாரம் என விஜயைச் சூழ்ந்து பெரும் சதி வலைகள் பின்னப்பட்டு வருகின்றன. இன்றைய தேதிக்கு (14) கூட, துணை முதல்வர் பவன் கல்யாணை வைத்து விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது பா.ஜ.க.

விஜய் மட்டும் NDA கூட்டணியில் இணைந்தால் வெற்றி என்பது 200 சதவீதம் நிச்சயம் என்று முன்னாள் முதல்வர் ஈ.பி.எஸ் தெளிவாக டெல்லிக்குத் தெரிவித்துள்ளார். "நான் முடிந்தவரை பிள்ளையார் சுழி போட்டுப் பார்த்துவிட்டேன், ஆனால் விஜய் அசைவதாகத் தெரியவில்லை; இனி உங்களால் முடிந்ததைப் பாருங்கள்" என்று ஈ.பி.எஸ் கூறிவிட்டார். "துணை முதல்வர் பதவி தரப்படும், நீங்கள் ஏன் NDA கூட்டணியில் இணைய மறுக்கிறீர்கள்?" என்று பவன் கல்யாண் கேட்டுள்ளார்.

இதேவேளை NDA கூட்டணி மேலும் ஒரு படி கீழே இறங்கி வந்து, முதல் இரண்டரை ஆண்டுகள் ஈ.பி.எஸ் முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு விஜய் முதல்வராகவும் இருக்கலாம் என்று கூடப் பேசிப் பார்க்கிறார்கள். ஆனால், விஜயிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் வரவில்லை. ஒருவேளை ஒ ஒத்துக்கொண்டு NDA கூட்டணியில் இணைந்தால், தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னர் 'ஜனநாயகம்' படம் ரிலீஸ் ஆகும்; திட்டமிட்டது போலப் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கும்; விஜய்க்கு மக்கள் ஆதரவு பெருகும்; தேர்தலில் NDA கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் பேசப்பட்டுள்ளன.

ஆனால், அவர் மசியவில்லை. இந்த நிலையில் அமேசான் நிறுவனம், 'ஜனநாயகம்' படத்திற்காகக் கொடுத்த 120 கோடியை மீண்டும் செலுத்துமாறு கோரியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் அந்தப் பணத்தைக் கட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இது விஜய்க்கு மேலும் அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது. இதுமட்டுமன்றி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட 90 சதவீதமானவர்கள் "நாம் கூட்டணி வைக்க வேண்டும்" என்ற கருத்தையே முன்வைத்துள்ளார்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க ஒரே ஒரு நோக்கத்தில்தான் தற்போது செயல்பட்டு வருகிறது.

முதலில் தமிழக ஆட்சிப் பீடத்திலிருந்து தி.மு.க-வை அகற்றுவது, அதன் பின்னர் தமது பா.ஜ.க-வை மெல்ல மெல்லத் தமிழகத்தில் வேரூன்ற வைப்பது என்பதே அது. இதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது வேறு யாரும் அல்ல, விஜய்தான். இதனால்தான் மீண்டும் சி.பி.ஐ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜயை அடிபணிய வைக்க இந்திய அரசே கங்கணம் கட்டி நிற்கிறது என்பது ஒரு கசப்பான உண்மைதான்; இதை மறுக்கவே முடியாது.

Previous Post Next Post

Contact Form