லாக்டவுன் போடுறது மட்டும் தான் ஒரே ஆப்ஷனா’?… ‘இதை ஏன் நாம முயற்சிக்க கூடாது’?… ‘ஆனந்த் மகேந்திரா’ சொன்ன சூப்பர் ஐடியா!

ஆனந்த் மகேந்திரா தான் ஒரு தொழில் அதிபர் என்பதைத் தாண்டி சமூக நலனிலும், சமூகத்தில் தினமும் நடப்பதை உன்னிப்பாகக் கவனித்து அதுகுறித்து தனது கருத்துக்களை எப்போதும் தெரிவித்து வருகிறார்.

Anand Mahindra Has A Suggestion As Maharashtra Battles Covid Surge

இந்தியாவில் சற்று தணிந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 26,291 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 78.41 சதவீதம் பேர் மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 16,620 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. இது இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கையாகும். நாட்டில் தற்போது 1,10,485 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் வரை மூன்று மாதங்கள் வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்தே வந்தது. இருப்பினும், கடந்த மாதம் வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.

Anand Mahindra Has A Suggestion As Maharashtra Battles Covid Surge

கடந்த மாதம் சராசரியாகத் தினமும் 6,000 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 15,000ஐ நெருங்கியுள்ளது. நாக்பூர் மாவட்டத்தில் வைரஸ் பரவல் மோசமாக உள்ளதால், அங்கு ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா முழுவதும் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

Anand Mahindra Has A Suggestion As Maharashtra Battles Covid Surge

இதற்கிடையே இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் மகேந்திரா, ”பொது முடக்கம் காரணமாக நெருக்கடியைச் சந்தித்த தொழில் துறை தற்போது தான் மெல்ல மெல்ல மேலே எழும்பி வருகிறது. மீண்டும் பொது முடக்கம் என்றால் அது பொருளாதாரத்தை அடியோடு பாதிக்கும். அதிலும் எங்களை விடவும் சிறு தொழில் செய்வோர், சிறிய அளவில் தொழிற்கூடம் நடத்துவோரைத் தான் அதிகமாகப் பாதிக்கும். ஆனால் கொரோனவை கட்டுப்படுத்த பொது முடக்கத்திற்குப் பதிலாகத் தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப் படுத்த வேண்டும்.

ஏன் ஒவ்வொரு வீடுகளுக்குக் கூட சென்று தடுப்பூசியைப் போடலாம். விருப்பம் உள்ள அனைவரும் போட்டுக் கொள்ளலாம். அதன் மூலம் நிச்சயம் கொரோனவை கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார். ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ள இந்த கருத்தினை நெட்டிசன்கள் பலரும் ஆதரித்து வருகிறார்கள்.