எல்லையில் பாகிஸ்தான் நபர் பிடிபட்டார்; திக் திக் நிமிடங்கள்!

ஜம்மு காஷ்மீரின் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்துக்குரியன் வகையில் உலவிய பாகிஸ்தான் நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

இதுதொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் நேற்று இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவரின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.

அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்டு விசாரணை தொடர்ந்து வருகிறது” என்றார்.