விமான நிலையத்திற்கு அருகில் மர்மநபர் செய்த செயல்.. ஜெர்மனியில் பரபரப்பு..!!

ஜெர்மனியிலுள்ள சர்வதேச விமான நிலையமான Düsseldorf-ன் வெளியில் நேற்று மதியம் திடீரென்று ஒரு நபர் அங்கு நின்ற மக்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். எனினும் அவர்கள் வருவதற்கு முன்பாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து, தாக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும், அந்த மர்ம நபரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Contact Us