வேலைக்கு சென்ற கணவன்; மருமகளுடன் மாமனார் தகாத உறவு!

பெரம்பலூர் அருகே மருமகளுடன் தகாத உறவு வைத்திருந்த மாமனாரை கொடுரமாக வெட்டிக் கொன்ற அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் டி.களத்தூர் அருகே உள்ள எலந்தலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (50). பழைய ஈய பாத்திரங்களிலுள்ள ஓட்டை, உடசல்களை சீரமைக்கும் கொள்ளுப் பட்டறை நடத்தி வந்துள்ளார். இவருக்கு, தையல்நாயகி மற்றும் ராணி என இரு மனைவிகளும், வேலன் (21), வெற்றிவேல் (19), கதிர் (14), என மூன்று மகன்களும் உள்ளனர்.

இதில் முதல் மனைவி தையல்நாயகி குடும்பத்தைப் பிரிந்து பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி ராணி மற்றும் மூன்று மகன்களுடன் முருகன் எலந்தலப்பட்டி கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முதல் மனைவியின் மகன் வேலனுக்கு, திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளநல்லூர் கிராமத்தை சேர்ந்த மீனா (18), என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் வேலைக்காக வேலன் காலையில் வெளியூர் சென்று விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வேலனின் தந்தை முருகன், மருமகள் மீனாவுடன் தகாத உறவு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை நேரில் கண்ட வேலன் ஆத்திரத்தில் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் தந்தை- மகனுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேலன் அவரது தந்தை முருகனை நேற்று அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், வேலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வேலனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வேலனை கைது செய்து அழைத்து சென்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us