சகோதரனை தாக்கிவிட்டு இளம் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்: யாழில் பரபரப்பு

 

யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பழை பகுதியில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (06) சனிக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர் . ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us