இரண்டு குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொன்ற தாய் மீது வழக்கு

இரண்டு ஆண் குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொன்று தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலத்தின் பாலக்காடு அடுத்த நெடுங்கோட்டு பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி திவ்யா. இத்தம்பதிக்கு அனிருத், அபினவ் என்கிற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். வினோத்துடன் அவரது பெற்றோரும் வசித்து வருகின்றனர்.

வினோத்திற்கும் திவ்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த திவ்யா இரண்டு குழந்தைகளையும் தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தனது கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற போது ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார்

அந்த சமயத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய வினோத், மனைவியை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். உடனே மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த வினோத்தின் அம்மா அம்மா அம்மா , பேரன்கள் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து மகனுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். அதன் பின்னரே வினோத்திற்கு குழந்தைகளை உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து போலீசார் விவரம் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த குழந்தைகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பேரன்கள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து பாட்டி அம்மணியம்மாள், அதிர்ச்சியில் தனது கை நரம்பை அறுத்து கொண்டிருக்கிறார். போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு குழந்தைகள் கொலை தொடர்பாக திவ்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குணம் அடைந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

 

Contact Us