Posted in

ஈரான் போருக்கு நடுவே அமெரிக்காவில் பெரும் துயரம்! கலிபோர்னியாவில் பி-52 போர் விமானம் நொறுங்கி 8 வீரர்கள் உடல்சிதறி பலி

ஈரான் நாட்டுடனான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போரின் காரணமாக ஏற்கனவே கடுமையான விமானப் படை இழப்புகளைச் சந்தித்து வரும் அமெரிக்காவிற்கு, தற்பொழுது சொந்த மண்ணிலேயே மிகப்பெரிய பேரிடி விழுந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்திலிருந்து வழக்கமான சோதனை ஓட்டத்திற்காகப் புறப்பட்ட, அமெரிக்காவின் அதிபயங்கர அணுஆயுதப் போர் விமானமான பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரெஸ் (B-52 Stratofortress), புறப்பட்ட சில நிமிடங்களிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வெளியே வானில் இருந்து தலைகீழாகக் குப்புற விழுந்து நொறுங்கியது. திங்கட்கிழமை காலை 11:20 மணியளவில் அரங்கேறிய இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த 8 அமெரிக்க வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த அதிர்ச்சி விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப் படை கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ், “இன்று எட்வர்ட்ஸ் விமானப் படை தளம் ஒரு கொடூரமான வரலாற்றுத் துயரத்தைச் சந்தித்துள்ளது; நாம் 8 சிறந்த அமெரிக்க வீரர்களை இழந்துவிட்டோம்” என மிகுந்த வேதனையுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரேடார் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்ற போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான அந்த பிரம்மாண்ட விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிய நிலையில், அதில் இருந்த ராணுவ வீரர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் போயிங் (Boeing) நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் உட்பட 8 பேரும் தப்பிழைக்க வாய்ப்பே இல்லாமல் போயுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ள நிலையில், முதற்கட்ட அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர விபத்து ஒருபுறமிருக்க, ஈரான் உடனான தற்போதைய போரில் அமெரிக்கா இதுவரை சந்தித்த மொத்த விமான இழப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் ராணுவ ரகசிய அறிக்கையும் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் சமீபத்திய ‘காங்கிரஸனல் ரிசர்ச் சர்வீஸ்’ (Congressional Research Service) அறிக்கையின்படி, ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா இதுவரை 42 போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ட்ரோன்களை (Drones) முற்றிலும் இழந்து அல்லது பலத்த சேதமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது! இதில் 24 அதிநவீன MQ-9 ரீப்பர் ட்ரோன்கள், F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், மற்றும் நடுவானில் எரிபொருள் நிரப்பும் KC-135 டாங்கர் விமானங்கள் என அமெரிக்காவின் முதுகெலும்பாகக் கருதப்படும் வான்படைப் பிரிவுகள் ஈரானிய எல்லையிலும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.

சொந்த மண்ணில் 8 வீரர்களின் உயிரைக் குடித்த பி-52 விமான விபத்து மற்றும் ஈரான் போரில் இதுவரை பல பில்லியன் டாலர்கள் மதிப்பில் 42 அதிநவீன வான்வழி சொத்துக்களைப் பறிகொடுத்துள்ள விவகாரம், தற்பொழுது அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனை (Pentagon) உலுக்கி எடுத்துள்ளது. இதுவரை இந்த ஈரான் போருக்காக மட்டும் அமெரிக்கா சுமார் 29 பில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. ஈரானின் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் வான் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா திணறி வரும் வேளையில், தற்பொழுது கலிபோர்னியாவில் நிகழ்ந்துள்ள இந்த விபத்து, அமெரிக்க வரலாற்றில் ஒரு தீராத வடுவாகவும், சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்க ராணுவத்தின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வாகவும் மாறியுள்ளது.