தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுப் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தவெக தலைவர் சி. ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சியின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி நிதியமைச்சர் மரிய கில்சன் அண்மையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். ஆனால், இதில் திமுக அரசின் நிதி முறைகேடுகள் குறித்த எந்தவொரு உறுதியான விவரங்களும் இடம்பெறாதது, புதிய தவெக அரசுக்குச் சாதகமாக அமையாமல், பொதுவெளியில் கடும் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தோல்வி குறித்துத் தவெகவின் முக்கிய உள்கட்சி வட்டாரங்கள் சில அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளன. நிதி விவகாரத்தில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளைப் பட்டியலிட, அவர்களின் ஆட்சி காலத்தில் இருந்த நிதித்துறை உயர் அதிகாரிகளால் மட்டுமே சாத்தியம் ஆகும். ஆனால், அவர்கள் திமுகவுடன் நேரடித் தொடர்பில் இருந்ததால், தவெக அரசு அமைந்ததும் பழிவாங்கும் நடவடிக்கை என்ற விமர்சனத்தைத் தவிர்க்க அதிகாரிகள் மாற்றப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாகப் புதிதாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளுக்குத் துறை சார்ந்த போதிய அனுபவம் இல்லாததால், இந்த வெள்ளை அறிக்கையைத் துல்லியமாகத் தயாரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உண்மையில், இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே முதலமைச்சர் விஜய்யின் நேரடிப் பார்வைக்கும், அவருக்கு நெருக்கமான கட்சி மேலிடப் புள்ளிகளின் ஆய்வுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் 10 லட்சம் கோடி ரூபாய் இல்லை, அது 13 லட்சம் கோடி ரூபாய் என்பதைப் பிரதானப்படுத்தி, பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுகவை முழுமையாக ‘ஆஃப்’ செய்யத் தவெக திட்டமிட்டிருந்தது. ஆனால், அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நிதியமைச்சரும் அதிகாரிகளும் மொத்தமாகச் சொதப்பிவிட்டனர். கடனளவு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரி பொதுவெளியில் கூறியது, இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கத்தையே முற்றிலும் சிதைத்துவிட்டதுடன், தவெக ஐடி விங்கால் (IT Wing) திமுகவிற்கு எதிராகச் சமூக ஊடகங்களில் களமாட முடியாமலும் போய்விட்டது.
திமுக ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான டெண்டர்களால் எவ்வளவு நிதி வீணடிக்கப்பட்டது, துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்படாமல் திரும்பியது போன்ற எந்த விபரமும் இதில் இல்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் விஜய், இந்த வெள்ளை அறிக்கையைத் தயாரித்த அதிகாரிகள் குழுவுக்குச் ‘செம டோஸ்’ விட்டுள்ளார். இதற்கிடையே, தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வியை வழங்கி வரும் சேலத்தின் முன்னணி கல்வி நிறுவனமான விநாயக மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் இன்ஜினியரிங் காலேஜ் கேம்பஸில் (Vinayaka Mission’s Kirupananda Variyar Engineering College) தற்போது பொறியியல் படிப்புகளுக்கான அட்மிஷன்ஸ் (Admissions Open) தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.