Posted in

ஆளுநர் உரையை தாக்கப் போய் தங்கள் ஆட்சியையே தாக்கிய திமுக ஐடி விங்! பதிவை அழித்தாலும் தப்பவில்லை

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 18, 2026) ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையுடன் தொடங்கியது. இந்த உரையில், “ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரே அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி, மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய பின்னர், தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை (Social Justice Audit) நடத்தும்” என்று ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பை ‘இரட்டை வேடம்’ என்று அசுர வேகத்தில் விமர்சிக்கப் புறப்பட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி (DMK IT Wing), ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்து சொந்தக் கட்சியையே நெட்டிசன்களிடம் சிக்க வைத்துள்ளது.

ஆளுநர் உரை வெளியான சில நிமிடங்களிலேயே, தவெக அரசுக்கு முன்பு ஒரு பேச்சு, பின்பு ஒரு பேச்சு என விமர்சனக் கணைகளைத் தொடுக்க நினைத்த திமுக ஐடி விங், தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் அவசர அவசரமாக ஒரு ஒப்பீட்டுப் பதிவை வெளியிட்டது. அதில், முதலமைச்சர் விஜய்யின் கடந்தகாலத் தேர்தல் வாக்குறுதியையும், தற்போதைய ஆளுநர் உரையையும் அருகருகே பதிவிட்டு, “ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது” என்று பெரிய எழுத்துக்களில் விமர்சித்திருந்தனர். ஆனால், தங்களின் அசுர வேகப் பரப்பரப்பில் ஆளுநர் உரையாற்றிய தேதியை ‘18/06/2026’ எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘18/06/2025’ எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டனர்.

கடந்த 2025 ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது திராவிட முன்னேற்றக் கழகம் (திமுாக) தான் என்பது உலகறிந்த உண்மை. திமுக ஐடி விங் செய்த இந்த ஒரே ஒரு எண் பிழையால், ஆளுநர் உரையை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு, கடந்த ஆண்டு தங்களின் சொந்த திமுக ஆட்சியில் தான் சமூக நீதி வேடம் கலைந்தது என்று தங்களின் கண்ணைத் தாங்களே குத்திக்கொண்ட கதையாக அது மாறியது. இந்தத் தேதிக் குளறுபடியை ஊடகங்கள் உடனடியாகத் தோலுரித்துக் காட்டத் தொடங்கியதும், பதறியடித்துக் கொண்ட திமுக ஐடி விங் அந்தப் பதிவை அவசர அவசரமாக அழித்தது. இருப்பினும், அதற்குள் அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டுகள் இணையத்தில் அசுர வேகத்தில் பரவி, திமுகவிற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டன.

ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஐடி விங் ‘ஆமை வேகத்தில்’ செயல்பட்டதால் தான் ஆட்சி கையை விட்டுப் போனது என்று உடன்பிறப்புகள் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முகம் கொடுத்துப் புகார் வாசித்து வருகின்றனர். அண்மையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜான் பிரிட்டோ என்பவரைக் காட்டி தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை வம்புக்கு இழுத்து ஒன்பது நாட்களிலேயே பல்பு வாங்கிய திமுக ஐடி விங், தற்போது மீண்டும் ஒரு அவசரக் கொடுக்குத்தனமான பதிவை வெளியிட்டுத் தலைமையின் ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. நேர்த்தியற்ற இந்தச் செயல்பாடுகளால் கடுப்பாகியுள்ள திமுக தலைமை, ஐடி விங் பொறுப்பாளர் டி.ஆர்.பி. ராஜாவை அந்தப் பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு ஒட்டுமொத்தக் கூடாரத்தையுமே ‘வாஷ் அவுட்’ செய்யலாமா என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.