Posted in

இனி பெங்களூரு, ஹைதராபாத் செல்ல வேண்டாம்! அமைச்சர் கீர்த்தனா சூப்பர் அப்டேட்!

தமிழகத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை (IT) மற்றும் தொழில்நுட்பப் பட்டதாரிகள் அதிக சம்பளத்திற்காகப் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு இடம்பெயர்வதைத் (Brain Drain) தடுத்து, நம்ம ஊரிலேயே அவர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவெக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance Tamil Nadu) அமைப்பின் தொழில் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின் பேசிய தமிழகத் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தமிழக இளைஞர்களுக்கு மாநிலத்திற்குள்ளேயே உலகத்தரம் வாய்ந்த மற்றும் அதிக ஊதியத்துடனான தொழில்நுட்ப வேலைகளை உருவாக்குவதே தங்களின் முதன்மை இலக்கு என்று அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கிக் கொண்டு செல்ல ‘தொழில்துறை கொள்கை 2026’ (Industrial Policy 2026) ஐ தீவிரமாக வடிவமைத்து வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, வெறும் உற்பத்தி சார்ந்த குறைந்த ஊதிய வேலைகளை மட்டுமே நம்பியிருக்காமல், ஜென்-இசட் (Gen-Z) தலைமுறைக்கு ஏற்றவாறு செமிகண்டக்டர் வடிவமைப்பு (Semiconductor Design), டீப்-டெக் (Deep-Tech), மற்றும் மேம்பட்ட மின்சார வாகனங்களுக்கான மென்பொருள் (EV Software) போன்ற அதிநவீன உயர்மதிப்புத் துறைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காகத் தொழிலதிபர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ் (Single-Window Clearance) எனப்படும் ஒற்றைச் சாளர அனுமதி முறையை மேம்படுத்தி, வெறும் 21 நாட்களுக்குள் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் வெளிப்படையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையங்களை அமைக்கப் போட்டியிடும் என்றும், இதன் பலனாகப் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் ஐடி ஊழியர்கள் பெறும் அதே அதிஉயர் ஊதியம் (High Salary Jobs) இனி சென்னையிலும், தமிழகத்தின் பிற இரண்டாம் கட்ட நகரங்களிலும் கிடைக்கும் என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் இந்த அதிநவீன ஐடி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பரவலாக்கத் தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சொந்த ஊரிலேயே குடும்பத்துடன் தங்கி, கைநிறைய சம்பளத்துடன் ஐடி துறையில் சாதிக்க விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு அமைச்சர் கீர்த்தனாவின் இந்த புதிய அப்டேட் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *