Posted in

லாஸ் வேகாஸில் புதிய தோற்றத்தில் டொனால்ட் டிரம்ப்! – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஹேர் ஸ்டைல் மர்மம்!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய ஹேர் ஸ்டைல் (Hairstyle) படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போலன்றி அவரது தலைமுடி வழக்கத்தை விட அதிக அடர்த்தியாகவும், புதிய வண்ணத்திலும் காட்சியளித்ததே இந்த விவாதத்திற்குக் காரணமாகும்.

லாஸ் வேகாஸில் உள்ள ‘ரெட் ராக் கேசினோ ரெசார்ட்’ பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் டிரம்ப் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட தளங்களில் தீயாய்ப பரவின. அவரது வழக்கமான ஹேர் ஸ்டைலில் இருந்து மாறுபட்டு, தலைமுடி மிகவும் அடர்த்தியாகவும், ‘செயற்கை விக்கைப்’ (Wig) போலவும் காட்சியளிப்பதாகக் கூறி இணையத்தில் நெட்டிசன்கள் விதவிதமான மீம்களை (Memes) உருவாக்கத் தொடங்கினர்.

அவரது இந்தத் திடீர் தோற்ற மாற்றம் குறித்து இணையத்தில் பல்வேறு ஊகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. சிலர் அவர் ‘ஹேர் டிரான்ஸ்பிளான்ட்’ அல்லது புதிய மேக்கப் செய்திருக்கலாம் என்று கூற, இன்னும் சிலர் 1980-களின் இறுதியில் பேசப்பட்ட பழைய வதந்திகளை மீண்டும் சுட்டிக்காட்டி விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த தோற்ற மாற்றம் குறித்து டிரம்பின் தரப்பிலிருந்தோ அல்லது அவரது ஊடகப் பிரதிநிதிகளிடம் இருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அரசியல் மேடைகளில் டொனால்ட் டிரம்பின் பேச்சுகள் எந்தளவிற்கு உற்றுநோக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு அவரது பிரத்யேகமான ஹேர் ஸ்டைலும் பல ஆண்டுகளாகப் உலக அளவில் கவனத்தைப் பெற்று வருகிறது. இந்நிலையில், லாஸ் வேகாஸ் நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகப் பகிரப்பட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.