Posted in

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடையும் போராட்டங்கள்: பல நகரங்களில் வன்முறை மற்றும் சூறையாடல்!

ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்துள்ளன. பிரான்ஸ் நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினர் மீது எரிகுண்டுகள் வீசப்பட்டதுடன், வணிகக் கடைகள் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதேபோன்று ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபுர்ட் நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிக் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன.

அல்பேனியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்திப் போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். பிரான்ஸில் நடைபெற்ற பேரணிகளின் போது பல இடங்களில் பள்ளிகள் மற்றும் பொதுக் கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் எந்திரங்களையும் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுமக்கள் இந்த அளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சேதங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

தற்போது ஐரோப்பிய நகரங்களின் முக்கிய வீதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடங்களில் சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதுடன், வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.