தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக சினிமா வட்டாரங்களிலும், அரசியல் களத்திலும் தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் அவர் தனது பெண் ரசிகைகளைச் சந்திப்பதற்காக பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் கலந்துகொண்ட அனைத்து ரசிகைகளுக்கும் பிரத்யேகமாக வெள்ளி விளக்குகளைப் பரிசாக வழங்கிய தனுஷ், இதற்காக சுமார் 1.5 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகக் கூறப்பட்டது. இந்த நிகழ்வு அவரது அரசியல் வருகைக்கான அடித்தளமாகப் பார்க்கப்பட்டதால், கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. இப்படம் முதலில் அக்டோபர் மாதமே வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நவம்பர் 6-ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தனுஷின் திரைப்பயணத்தில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்த விழாவில், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தனுஷ் அரசியலில் களமிறங்கப் போவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் தற்போதைய சூழலில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறுவது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, “ஏன் நானெல்லாம் அரசியலுக்கு வரக்கூடாதா…” என்ற தனது பாணி சினிமா வசனங்களைப் போல, இந்த மேடையில் தனுஷ் தனது அரசியல் என்ட்ரி அல்லது எதிர்காலத் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவாரா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆவலும் அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது.