ஈரானின் மலைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E போர் விமானத்தில் இருந்த இரண்டாவது அதிகாரி உயிர் தப்பியது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விமானம் வீழ்ந்ததும் அவர் பராசூட்டில் இறங்கி உடனடியாக மலைப்பகுதிக்குள் நகர்ந்தார். கடும் காயங்களுடன் இருந்த அவர், சுமார் 48 மணி நேரம் வரை எதிரி நாட்டுக்குள் ஒளிந்து இருந்து உயிர் காத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் 7,000 அடி உயர மலைச்சரிவை 24 மணி நேரமாக தொடர்ச்சியாக ஏறியுள்ளார். பாறை பிளவுகளுக்குள் மறைந்து இருந்தார், என அவரே தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானி Survival, Evasion, Resistance, Escape (SERE) என்ற சிறப்பு பயிற்சியை பயன்படுத்தி ஈரான் படைகளிடம் இருந்து தப்பினார். அவர் தனியாக இருந்தாலும் அவசர சிக்னல் சாதனத்தை இயக்கி அமெரிக்க படைகளுக்கு தனது இருப்பிடத்தை தெரிவித்து கொண்டார். மேலும் கைதுப்பாக்கி மட்டும் வைத்திருந்த நிலையில், பகலில் நகராமல் இரவில் மட்டும் இடம் மாறி எதிரிகளை தவிர்த்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நேரத்தில் ஈரான் படைகள் அவரை பிடிக்க பெரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டன. பொதுமக்கள் உதவிக்கு கூட பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் CIA திட்டமிட்ட தவறான தகவல் பரப்பல் (deception campaign) மூலம், விமானி வேறு பகுதியில் இருப்பதாக ஈரான் படைகள் நம்பும்படி செய்தது. இதனால் ஈரான் தேடுதல் குழுக்கள் தவறான இடங்களில் தேடியதால் விமானி கண்டுபிடிக்கப்படவில்லை.
சுமார் 36 மணி நேரத்திற்கு மேல் நீண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் இறுதியில் நூற்றுக்கணக்கான கமாண்டோ படை மற்றும் பல ஹெலிகாப்டர்கள் கொண்டு அமெரிக்கா மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது. கடும் துப்பாக்கிச்சூடு மற்றும் ட்ரோன் ஆதரவுடன் விமானி மீட்கப்பட்டார். மீட்பு போது சில அமெரிக்க விமானங்கள் சிக்கியதால் அவை எதிரி கைக்கு போகாமல் அமெரிக்காவே அழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முழு நடவடிக்கை “மிக துணிச்சலான ரகசிய rescue mission” என உலகளவில் பேசப்படுகிறது.