விண்வெளியில் வழக்கத்திற்கு மாறான வேகத்திலும் இயக்கத்திலும் நகர்ந்து வரும் விண்கல் போன்ற மர்மப் பொருள் குறித்து அறிவியலாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். புவி ஈர்ப்பு விசையின் வழக்கமான விதிகளுக்கு உட்படாமல் இந்தப் பொருள் வேகமாக நகர்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு புதிய கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இது விண்வெளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சோவியத் யூனியனின் பழமையான விண்கலமாக இருக்கலாம் என்ற புதிய கருத்து ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ஜார்ஜியா தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், 1998 KY26 என்று அழைக்கப்படும் இந்த விண்கல் இயற்கையான காரணங்களை விட வேகமாக நகர்வது கண்டறியப்பட்டது. இது குறித்துப் பலரும் இது உறைந்த நீரைக்கொண்ட ஒரு ‘கருடன் வால்வெள்ளி’ (Dark comet) என்று வாதிட்டாலும், இதன் தற்போதைய வெப்பநிலை அதற்கு வாய்ப்பில்லை என்று மறுக்கிறது. இதற்கிடையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற வானியற்பியல் நிபுணர் அவி லோப் (Avi Loeb) தலைமையிலான குழுவினர், இது சோவியத் யூனியன் காலத்தைச் சேர்ந்த ‘போபோஸ் 1’ (Phobos 1) விண்கலத்தின் எச்சங்களாக இருக்கக்கூடும் என்று புதிய கோட்பாட்டை முன்வைத்துள்ளனர்.
சூரிய ஒளியின் அழுத்தம் இந்த விண்கலத்தின் உலோகப் பரப்புகள் மற்றும் சோலார் பேனல்களில் படுவதால் ஏற்படும் தாக்கமே அதன் இந்த வேகமான இயக்கத்திற்குக் காரணமாக இருக்க முடியும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு சாதாரண பாறை போன்ற விண்கலம்தான் என்றும், இதில் அச்சப்படத் தேவையில்லை என்றும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அறிவியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்தாலும், பல ஆய்வாளர்கள் இதனை முற்றிலும் மாறுபட்ட கோணத்திலும் ஆராய்ந்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இந்தப் பொருளின் உண்மையான தன்மையை அறிந்துகொள்ளும் வகையில் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் (JAXA) ஹயபுசா 2 (Hayabusa2) விண்கலம் இதனுடன் நெருங்கி ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2031-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தின் சந்திப்புக்குப் பின்னரே, இது செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதனின் விண்கலமா அல்லது இயற்கையான விண்கல்லா என்பது குறித்த முழுமையான உண்மை தெரியவரும்.