தென்னிந்தியத் திரையுலகின் ‘எவர்க்ரீன்’ குயினாக வலம் வரும் த்ரிஷா, சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் தென்பட்ட ஒரு வீடியோ இப்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சுற்றிலும் கேமராக்களும் நிருபர்களும் சூழ்ந்து கொண்டு “விஜய் சார் பற்றி எதாவது சொல்லுங்க?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால், எதற்கும் செவிசாய்க்காத த்ரிஷா, முகத்தில் ஒரு சின்ன புன்னகையுடன், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு ‘கூல்’ ஆக நடந்து சென்றார். இந்த மௌனம் தான் இப்போது சமூக வலைதளங்களில் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் தகவல்களுக்குப் பிறகு, த்ரிஷாவின் ஒவ்வொரு அசைவும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. “விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்”, “விஜய் சென்ற அதே காருக்குள் த்ரிஷா ஏறினார்” எனப் பல செய்திகள் ஏற்கனவே ரகளையை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் “அமைதிதான் சிறந்தது, விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை” என்று ஒரு பதிவைப் போட்டது, விஜயுடனான உறவை அவர் மறைமுகமாக உறுதிப்படுத்துகிறாரா அல்லது வதந்திகளைப் புறக்கணிக்கிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
ஒரு பக்கம் “நாங்க காதலிக்கிறோம், காதலில்லைன்னு சொல்லவே மாட்டோம்” என த்ரிஷா பிடிவாதம் காட்டுவது போலவே அவரது மௌனம் இருக்கிறது. அதேசமயம், த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாக எழுந்த வதந்திகளுக்கு “நான் 4 குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டேனா?” என நக்கலாகப் பதிலளித்து வதந்திகளைப் போட்டுத் தள்ளியிருந்தார். ஆனாலும், விஜயுடனான அந்த ‘மர்ம’ உறவு குறித்த கேள்விக்கு மட்டும் அவர் மௌனம் காப்பது ஏன் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. எது எப்படியோ, ‘கில்லி’ ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேருவார்களா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது!