கடலூரில் நடந்த அந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துல நம்ம வி.சி.க தலைவர் திருமாவளவன் அண்ணன் மைக் பிடிச்சு, “அண்ணியார் பிரேமலதா” அப்படின்னு பேரைச் சொன்னதுதான் தாமதம்… மேடையில் ஒரு சின்ன ‘கலவரமே’ நடந்து போச்சு! வழக்கமா பெரிய தலைவர்கள் பேரைச் சொன்னா மரியாதைக்காக ‘ஸ்பிரிங்’ மாதிரி துள்ளி எழுந்து நிக்கணும்ங்கிறது ஊர் வழக்கம். ஆனா அண்ணியாரோ, “அதெல்லாம் முடியாதுப்பா”ங்கிற மாதிரி ‘கெத்தா’ உட்கார்ந்த இடத்திலேயே ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க… அதுதான் இப்போ சோசியல் மீடியா முழுக்க ‘ஹாட் டாபிக்’! இதைப்பார்த்து கடுப்பான வி.சி.க தம்பிகள், “என்னங்கடா இது நம்ம தலைவருக்கு வந்த சோதனை? இது சிரிப்பு இல்ல, நக்கலு”ன்னு நெட்ல இறங்கி அண்ணியாரை வச்சு செஞ்சுட்டாங்க.
விஷயம் சீரியஸாகி ‘புயல்’ கிளம்புன உடனே, அண்ணியார் பிரேமலதா களத்துல குதிச்சு ஒரு ‘விளக்கத்தை’ கொடுத்திருக்காங்க. “யோவ் மீடியா, நீங்கதான்டா இல்லாத ஒன்ன ஊதி பெருசாக்குறீங்க”ன்னு ஆரம்பிச்சவங்க, “நானும் அண்ணன் திருமாவளவனும் அன்னைக்கே போன்ல பேசி எல்லாத்தையும் சரி பண்ணிட்டோம். மக்கள் நலக் கூட்டணி காலத்துல இருந்தே நாங்க ‘ஃபேமிலி ஃபிரண்ட்ஸ்’ மாதிரிதான். சொல்லப்போனா அவர் வச்சிருக்கிற ‘வெளிச்சம்’ டிவியையே கேப்டன் தான் ஓப்பன் பண்ணி வச்சாரு. எங்களுக்கிடையில் இருக்குற அண்டர்ஸ்டாண்டிங் உங்களுக்குப் புரியாது”ன்னு ஒரு போடு போட்டாங்க.
இன்னொரு பக்கம் நம்ம திருமா அண்ணனும், “அண்ணியாரைப் பத்தி எனக்குத் தெரியும்ப்பா.. அவங்க இயல்பாத்தான் சிரிச்சாங்க. மேடை மாண்புப்படி முதலமைச்சர் தான் எல்லாரையும் அறிமுகப்படுத்தணும், ஆனா நான் ஓவர் குஷியில பேரைச் சொல்லிட்டேன். இதைப் பெருசு பண்றதே இந்த ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும்தான்”னு சொல்லி எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வச்சுட்டாரு. ஆக மொத்தத்துல, “விருத்தாச்சலத்துல அண்ணன் எனக்காகப் பிரச்சாரத்துக்கு வர்றாரு, அங்க பாருங்க எங்க கெமிஸ்ட்ரியை”னு சொல்லி அண்ணியார் இந்த மேட்டர்ல ‘எண்ட் கார்டு’ போட்டுட்டாரு. அப்புறம் என்ன… எல்லாம் ‘சும்மா லொல்லு’ தான் போல!