Posted in

லண்டனில் இளம்பெண்ணைத் தாக்கிய வழக்கில் ட்ரம்பின் பேரனுக்கு என்ன தொடர்வு : தண்டனை உறுதி

லண்டனில் இளம்பெண்ணைத் தாக்கிய வழக்கில் ட்ரம்பின் பேரனுக்கு என்ன தொடர்வு : தண்டனை உறுதி - Image 1

லண்டனில் இளம்பெண்ணைத் தாக்கிய வழக்கில் ட்ரம்பின் பேரனுக்கு என்ன தொடர்வு : தண்டனை உறுதி - Image 1

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 19 வயது மகன் பேரன் ட்ரம்ப், கடந்த 2025 ஜனவரியில் லண்டனில் உள்ள தனது தோழியுடன் ஃபேஸ்டைம் (FaceTime) மூலம் பேச முயற்சித்துள்ளார். அப்போது அவரது தோழி மட்வே ரூமியான்ட்சேவ் (Matvei Rumiantsev) என்ற 22 வயது முன்னாள் எம்.எம்.ஏ (MMA) வீரரால் கொடூரமான முறையில் தாக்கப்படுவதை பேரன் ட்ரம்ப் நேரில் பார்த்துள்ளார். சுமார் 3,000 மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் இருந்த பேரன், எவ்விதத் தாமதமுமின்றி லண்டன் அவசர கால எண்ணான 999-க்கு அழைத்து, அந்தப் பெண்ணின் முகவரியைக் கொடுத்து போலீசாரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பேரன் ட்ரம்ப் மற்றும் போலீசாருக்கு இடையிலான உரையாடல் ஒலிப்பதிவு ஆதாரமாகப் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், “நான் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தேன், ஒரு நபர் அவளை மிகக் கொடூரமாக அடிப்பதைக் கண்டேன், தயவுசெய்து அவசர உதவி அனுப்புங்கள்” என்று பேரன் பதற்றத்துடன் கேட்டுக்கொண்டார். பேரன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதுடன், தாக்குதல் நடத்திய ரூமியான்ட்சேவையும் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட மட்வே ரூமியான்ட்சேவ், பேரன் ட்ரம்ப்புடன் தனது காதலி நட்பாகப் பழகுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், “பேரன் ட்ரம்ப் அன்று அந்த போன் காலைச் செய்யவில்லை என்றால், இந்நேரம் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்; அது கடவுள் கொடுத்த அடையாளம் போல இருந்தது” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ரூமியான்ட்சேவ் மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் மட்வே ரூமியான்ட்சேவ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனது தந்தையின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லும் பரபரப்பான சூழலிலும், ஒரு தோழியின் உயிரைக் காப்பாற்ற பேரன் ட்ரம்ப் காட்டிய சமயோசித புத்தி மற்றும் மனிதாபிமானத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் பேசப்பட்ட இந்த ‘ஹை-புரோஃபைல்’ வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது.

Leave a Reply