முதல் சுற்று தபால் வாக்கு எண்ணிக்கையில், தவெக பெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் கள நிலவரம் தலை கீழாக மாறி இருக்கிறது. விஜய் இந்த தேர்தலில் பெரும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதால். உளவுத் தகவல் அடிப்படையில் அவர் அலுவலகம் மற்றும் வீட்டுக்கு முன்னால் பல நூறு பொலிசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒரு முதலமைச்சர் வீட்டுக்குக் கொடுக்கப்படும் மூன்றடுக்குப் பாதுகாப்பை, சென்னை பனையூரில் உள்ள TVK அலுவலகத்திற்குத் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோக நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு முன்னால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மத்திய அரசின் மற்றும் உளவுத்துறையின் உத்தரவின் பேரில்தான் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, நிச்சயம் ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. அது விஜயினுடைய மாபெரும் வெற்றியாக இருக்கலாம்.