நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், காரைக்குடியில் போட்டியிட்டுப் படுதோல்வியடைந்துள்ளார். அவர் கட்டிய பணம் (டெபாசிட்டை) இழந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதிலும் நாம் தமிழர் கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் இந்தப் படுதோல்விக்குக் காரணம், சீமான் தேர்தல் நெருங்கி வந்த சமயம் தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து டீல் போட்டதுதான்.
பெரும் தொகைப் பணத்தை திமுகவிடம் இருந்து பெற்றுக்கொண்டு, விஜய்யை வசைபாடியதுமே சீமான் தோல்விக்கு முழு முதல் காரணம் ஆகும். ஈழத் தமிழர்களை இலங்கை அரசு கொன்ற வேளையில் திமுக அரசு பெரும் துரோகம் இழைத்தது என்று கூறி, அரசியலுக்கு வந்து திமுக மீது விமர்சனங்களை வைத்த வேளையில், சீமானுக்குப் பெரும் ஆதரவு இருந்தது. கடந்த தேர்தலில் அவருக்குச் சுமார் 8% சதவீத வாக்குகள் பதிவாகி, மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. ஆனால் எப்போது அவர் திமுகவுக்குச் செம்பு தூக்க ஆரம்பித்தாரோ…
அன்றே அவர் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்தார். மேலும் எதிரியான திமுகவை விமர்சிக்காமல், தேவையே இல்லாமல் விஜய்யை வசைபாடி இன்று தனக்குத் தானே குழி வெட்டி அதில் தன் தலையைப் புதைத்துள்ளார். இந்த முறை நடந்த தேர்தலில் சீமானின் கட்சி வெறும் 2% வாக்குகளைக்கூடப் பெறவில்லை என்பது அதிர்ச்சியான தகவல்தான்.