தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுப் பிரம்மாண்ட வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். தனது சட்டமன்றப் பயணத்தைப் பெரம்பூர் தொகுதியில் இருந்து தொடர விரும்புவதால், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ய உள்ளார்.. விஜய்யின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாரைக் களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், தற்போது ஒரு ‘மெகா’ தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில், தமிழகத்தின் மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. உ. சகாயம் அவர்களைக் களமிறக்க விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகாலப் பணியில் சுமார் 26 முறை இடமாற்றம் செய்யப்பட்டாலும், லஞ்சத்திற்கு எதிராக “லஞ்சம் தவிர், தலை நிமிர்” என்ற முழக்கத்துடன் செயல்பட்டவர் சகாயம். குறிப்பாக மதுரையில் நடந்த பல்லாயிரம் கோடி மதிப்பிலான கிரானைட் ஊழலைத் துணிச்சலாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் இவர். இவரைத் தனது கட்சியில் இணைக்க விஜய் பலமுறை முயற்சி செய்தும், ஆரம்பத்தில் அவர் தயக்கம் காட்டி வந்தார்.
விஜய் நேரில் அழைத்துக்கூட சகாயம் வர மறுத்த விவகாரம், விஜய்க்கு அவர் மேல் இருந்த மரியாதையை மேலும் அதிகரித்தது. “தன் கொள்கையில் இவ்வளவு உறுதியாக இருக்கும் ஒருவரே தனது கட்சிக்குத் தேவை” என விஜய் உறுதியாக நம்பினார். தற்போது தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், நேர்மையான நிர்வாகத்தை வழங்க சகாயம் போன்றவர்களின் பங்களிப்பு அவசியம் என விஜய் மீண்டும் விடுத்த வேண்டுகோளைச் சகாயம் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் திருச்சி கிழக்குத் தொகுதி, தமிழக அரசியலில் நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையிலான ஒரு போர்க்களமாக மாறப்போகிறது.
சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது உறுதியானால், அது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய பலமாக அமையும். ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும், பண பலத்தையும் தாண்டி மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குச் சகாயம் ஒரு சிறந்த முகமாக இருப்பார். விஜய்யின் மக்கள் செல்வாக்கும், சகாயத்தின் நேர்மையும் இணையும் பட்சத்தில், திருச்சி கிழக்குத் தொகுதியில் TVK ஒரு இமாலய வெற்றியைப் பெறுவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் உண்மையான விடையம் என்னவென்றால், விஜய் அவர்கள் ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை அமைக்க முதல் நாளே திட்டமிட்டுள்ள விடையம் என்பது உண்மையில் போற்றத் தக்க விடையம் ஆகும்.