தேர்தலுக்குப் பின்னர் TVK வெல்லும் என்று உளவுத்துறை கொடுத்த அறிக்கையைக்கூட மறைத்து, அதனைப் பொய் என்று நிரூபிக்கப் பெரும் பணத்தைக் கொடுத்து எக்ஸிட் போல் (Exit Poll) கருத்துக்கணிப்பு செய்யும் பல கம்பெனிகளை விலைக்கு வாங்கி, அவர்களை வைத்தே ஸ்டாலினை நம்ப வைத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார் சேகர் பாபு.
“தலைவா நீங்கதான் டாப்பு, தலைவா நீங்க மாஸ்” என்று அடிக்கடி கூறிவந்த சேகர் பாபுவுக்குக் கொளத்தூர் நிலவரம் நன்றாகத் தெரியும். கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி உறுதி இல்லை என்பதனை முன்னரே அறிந்திருந்த சேகர் பாபு, இதனையெல்லாம் பொய் என்று காட்டவே எக்ஸிட் போல் என்ற பெரும் நாடகத்தை ஆடியுள்ளதாக திமுக உடன்பிறப்புகள் மாரில் அடித்து அழுகிறார்கள்.
கரூரில் போட்டியிட்டால் நிச்சயம் தோற்றுப் போவோம் என்று அறிந்துகொண்ட சேகர் பாபு, ஸ்டாலினுடன் பேசி உடனே தனது தொகுதியை மாற்றிவிட்டார். தனது தொகுதியில் வாக்கிற்கு 5,000 வரை கொடுத்து இருக்கிறார் சேகர் பாபு. ஒரு தொகுதிக்கு மட்டும் சுமார் 50 கோடி முதல் 65 கோடி வரை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எது எப்படியென்றாலும், ஸ்டாலினுக்குப் பெரும் ஆப்பு ஒன்றை வைத்துவிட்டார் சேகர் பாபு. இவரது பேச்சை நம்பியே ஸ்டாலின் வேறு ஒரு தொகுதியிலும் போட்டியிடவில்லை.
இல்லையென்றால் விஜய் போல 2 இடங்களில் போட்டியிட்டு இருக்க முடியும். இப்படி ஒரு ஓவர் கான்பிடென்ஸ் (Overconfidence) கொடுத்ததே சேகர் பாபுதான். விஜய் தேர்தலுக்காக வகுத்த பல வியூகங்களை 75 வருட பழைய கட்சியான திமுகவால் கூட உடைக்க முடியவில்லை என்பது, விஜய் எந்த அளவு மாஸ்டர் பிளான் போட்டு இருந்தார் என்பதனை எடுத்துக்காட்டுகிறது. BJP ஏதாவது தில்லுமுல்லு செய்து, தன்னைத் தோற்கடிக்கக் கூடும் என்று நினைத்த விஜய், இதற்காகத்தான் 2 இடங்களில் போட்டியிட்டார். ஆனால் அதனைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பல ஊடகங்கள் இதனைக்கேலி செய்தன.
இன்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவியது என்பது, திமுக கட்சி வரலாற்றில் கறை படிந்த நாள். இது பெருத்த அவமானம் மற்றும் அசிங்கம். ஒரு கட்சித் தலைவரே தோல்வியடைந்தது என்பது தமிழக வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை. திமுக தற்போது எதிர்க்கட்சியாக மாறியுள்ள நிலையில், அதிமுக கட்சி, BJP-யோடு இணையாமல் விஜய்யுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால், இன்று பல இடங்களை வென்று திமுகவை 3-வது இடத்திற்குத் தள்ளியிருக்கும் என்பது நிச்சயம். இதுபோக காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல புதிய பாடங்களைப் படித்துள்ளன.