உலகையே உலுக்கும் ஒரு அதிர்ச்சித் தகவல் தற்போது சர்வதேச ஊடகங்களில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல், வெறும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தையாக இல்லாமல், மிகக் கடுமையான வாக்குவாதமாகவும், அநாகரிகமான வார்த்தைகள் தடித்த மோதலாகவும் மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தவிருந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவே டிரம்ப் இந்த விஸ்வரூபத்தை எடுத்துள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுடன் அமெரிக்கா நடத்தி வரும் மிக ரகசியமான மற்றும் சுமுகமான அமைதிப் பேச்சுவார்த்தைகளை, இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதல் திட்டம் முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். இந்த ஆத்திரத்தில், தொலைபேசி வழியே நெதன்யாகுவை டிரம்ப் முற்றிலும் “நெருக்கித் தள்ளியுள்ளார்”. “நீ என்ன ம*** பண்ணிட்டு இருக்கே?” என்றும், “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்றும் அமெரிக்க அதிபர் மிகக் கடுமையான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் பிரதமரை நோக்கி கத்தியதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலின் உச்சக்கட்டமாக, நெதன்யாகுவின் பலவீனமான அரசியல் நிலையை டிரம்ப் மிகக் கொச்சையாகக் குத்திக் காட்டியுள்ளார். இஸ்ரேலில் நெதன்யாகு எதிர்கொண்டு வரும் ஊழல் வழக்குகளைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், “நான் மட்டும் இல்லைனா இந்நேரம் நீ சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பாய், உன்னைக் காப்பாற்றுவதே நான்தான், ஆனால் இப்போது உன்னுடைய இந்த பேரழிவுகரமான செயலால் உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலையும் உன்னையும் வெறுக்கத் தொடங்கிவிட்டன” என்று முகத்தில் அடித்தாற்போல் எச்சரித்துள்ளார். இந்த ஒற்றைத் தொலைபேசி அழைப்பிற்குப் பயந்துபோன நெதன்யாகு, அடுத்த சில நிமிடங்களிலேயே பெய்ரூட் மீதான தாக்குதல் உத்தரவைத் திரும்பப் பெற்று ராணுவத்தை பின்வாங்கச் செய்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நான் பிபியிடம் பேசினேன், லெபனானுக்குள் நுழைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன், அவரும் ராணுவத்தைத் திருப்பி அனுப்பினார், தேங்க்ஸ் பிபி” என்று மிக நயமாகப் பதிவிட்டு உண்மையை மறைக்க முயன்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் இந்தத் தொலைபேசி அழைப்பு “மிகவும் பதற்றமாக” அமைந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டாலும், டிரம்ப் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதனையும், சிறை தண்டனை குறித்து மிரட்டினார் என்பதனையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எது எப்படியோ, உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர், தனது நட்பு நாட்டுப் பிரதமரையே இந்த அளவுக்குத் தரக்குறைவாக மிரட்டியுள்ளது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.