சந்திரமுகி நடிகர் வினீத்தின் மனைவியா இது? – கியூட்டான பேமிலி போட்டோ!

சந்திரமுகி நடிகர் வினீத்தின் மனைவியா இது? – கியூட்டான பேமிலி போட்டோ!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் ஆன வினீத் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர்கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வரத் தொடங்கினார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் சந்திரமுகி, காதல் தேசம், பிரியமான தோழி ,தேவதை, ஒளியின் ஓசை,கட்டபொம்மன், ஆவாரம்பூ ,காதல் கிறுக்கன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் இவர் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் அவரது ரோல் மக்கள் மனதில் மிகவும் ஆழமாக பதியும்படி இருந்தது. அதன் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சந்திரமுகி படத்தில் இவர் ஆடிய பரதநாட்டியம் இன்று வரை மக்களால் மறக்கவே முடியாது.

நடிகர் வினீத் கடந்த 2004 -ம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது நடிகர் வினீத் தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் கியூட்டான குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.