அக்கா கல்யாணத்தில் பாலிவுட் நடிகருடன் குத்தாட்டம் போட்ட அதிதி – வீடியோ!

அக்கா கல்யாணத்தில் பாலிவுட் நடிகருடன் குத்தாட்டம் போட்ட அதிதி – வீடியோ!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு அண்மையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ரோகித் என்ற கிரிக்கெட் பறிற்சியாளருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்து விட்டது.

அதன் பின்னர் மறுமணம் செய்து வைக்க முடிவு செய்த சங்கர் தற்போது தனது உதவி இயக்குனரான தருண் கார்த்திகேயனுக்கு தனது மகளை மணமுடித்து வைத்திருக்கிறார். ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் அதிதி ஷங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணத்திற்கு வந்திருந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர்களுடன் இயக்குனர் அட்லீயும் ஆட்டம் போட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதோ அந்த வீடியோ: